குமரிப் பொண்ணுங்க கோலம் போடுறாங்க... இளவட்டங்க எங்க இருக்கீங்க?

Subscribe to Oneindia Tamil

பண்டிகை வந்தாலே ஒரே கொண்டாட்டம்தான். நாலு நாள் லீவு. போகி தொடங்கி காணும் பொங்கல் வரைக்கும் கிராமத்தில் கும்மாளமும் உற்சாகமுமாய் பொழுது கழியும். வெளியூர்களுக்கு படிக்கப் போனவர்களும், வேலைக்குப் போனவர்களும் மொத்தமாக குவிந்து விடுவார்கள். அது மட்டுமல்லாது வேறு ஊருக்கு திருமணமாகிப் போனவர்களும் கூட பொங்கலைக் கொண்டாட தாய்வீட்டுக்கு வருவதுண்டு. இதுபோன்ற ஒரு பொங்கல் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

காப்புக் கட்டுங்க

காப்புக் கட்டுங்க

போகி தினத்தில் வீட்டில் குப்பைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து சுண்ணாம்பு கோலமிட்டு வீட்டு வாசலில் காப்பு கட்டுவார்கள். வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம் பூ, கம்மந்தட்டை ஆகியவற்றை மொத்தமாக கட்டி வீட்டு மூலைகளில் தொங்க விடுவார்கள். இதனை கிராமப்புறங்களில் காப்புக் கட்டுதல் என்பார்கள்.

அன்றைய தினம் இரவு வீட்டில் விடிய விடிய விளக்கேற்றி வைத்திருப்பார்கள். வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தவிர போகிப் பண்டிகை தினம் நம் வீட்டிற்கு ஔவையார் வந்து பார்ப்பார் என்றும் விளக்கேற்றி வைத்திருப்பவர்கள் ஆசிர்வாதம் செய்துவிட்டு போவார் என்றும் கூறுவார்கள்.

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

பொங்கல் பண்டிகை தினத்தில் அதிகாலையிலேயே வீட்டின் முன் வர்ணப்பொடிகளால் கோலமிட்டு பொங்கல் வைக்க ஆரம்பித்து விடுவார்கள். மார்கழி மாதத்தில் தினந்தோறும் கோலமிட்டு அதில் சாணம் வைத்து பூசணிப்பூ வைத்திருப்பார்களே அந்த சாணத்தை மொத்தமாக சேர்த்து வைத்து அது காய்ந்து போயிருக்கும் அதை அடுப்பில் போட்டு வறட்டியாக எரிப்பார்கள். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என உற்சாகக் குரல் எழுப்புவார்கள். பொங்கல் வைத்த உடன் சாமி கும்பிட்டு சாப்பிட்ட உடன் எல்லோரும் மைதானத்திற்கு வந்து விடுவார்கள். அங்குதான் பொங்கலின் உற்சாகமே தொடங்குகிறது.

களை கட்டும் விளையாட்டு

களை கட்டும் விளையாட்டு

பொங்கல் வந்தாலே விளையாட்டுப் போட்டிகள் களைகட்டும். சிறுவர்களுக்கு ஓட்டப்போட்டி, சாக்குப் போட்டி, ரொட்டிக் கடித்தல் மியூசிக் சேர் போன்றவை இருக்கும். இளம்பெண்களுக்கு லக்கி கார்னர், ஸ்பூன் எலுமிச்சை, தண்ணீர் குடம் சுமத்தல், கோலப்போட்டி என கலந்து கட்டி அடிப்பார்கள். இளவட்டங்களுக்கு சைக்கிள் ஸ்லோ ரேஸ், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கபடி என ஒவ்வொரு விளையாட்டும் உற்சாகமாக பொழுது போகும்.

குமரிகளும், இளசுகளும்....

குமரிகளும், இளசுகளும்....

விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வசூல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் எங்கள் ஊர் இளசுகள். பொங்கல் திருநாள் அன்று அதிகாலையில் இருந்தே ஸ்பீக்கரில் அலற ஆரம்பித்து விடுவார்கள். விளையாட்டுப்போட்டி ஆரம்பிக்கப்போகிறது சீக்கிரம் வாங்க... முதல்ல கோலப்போட்டி என்று அறிவிப்பு கேட்டதும்தான் தாமதம் குமரிப்பொண்ணுங்க எல்லோரும் கலர்ப் பொடியை எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிடுவார்கள். குமரிகள் கோலம் போடுவதைப் பார்க்க இளவட்டங்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்க்க அதை பெருசுகள் நோட்டம் விடுவார்கள் பார்க்க வேண்டுமே. அதெல்லாம் இன்றைக்கும் மலரும் நினைவுகளாக நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறது.

பானை உடைஞ்சு போச்சே

பானை உடைஞ்சு போச்சே

விளையாட்டுப்போட்டிகளில் பானை உடைத்தல்தான் அதிகம் உற்சாகமாக இருக்கும். கண்ணைக் கட்டிக்கொண்டு பானையை உடைக்க கம்பை சுழற்றும் போட்டியாளர்களைப் பார்ப்பதே தனி காமெடிதான். பானையை உடைக்கிற சாக்கில் பிடிக்காதவர்களின் மண்டையை உடைத்த கதை வேறு இருக்கிறது. இதில் செட் ஆன ஜோடி திருமணத்தில் முடிந்த கதை உண்டு.

மாட்டுப்பொங்கல் தினத்திலும் மீதமுள்ள விளையாட்டை முடித்து மாலையில் கலை நிகழ்ச்சிகளோடு பரிசு கொடுப்பார்கள். காணும் பொங்கலன்று கறி சோறு சாப்பிட்டுவிட்டு புதுப்படம் ஏதாவது ரிலீஸ் ஆகியிருக்கா? தியேட்டருக்கு போகலாம் என்று கிளம்பிவிடுவார்கள்.

இன்றைக்கும் பொங்கல் பண்டிகை வந்தாலே நான்கு நாள் கொண்டாட்டம் நினைவுக்கு வந்துவிடும். என்னங்க இந்த வருஷம் பொங்கலுக்கு நம்ம ஊருக்குப் போவோமா? என்று கேட்டாலே போதும். எதுக்கு போய் போட்டியில கலந்துக்கணுமா? என்று கேட்பார் என் கணவர்.

நீங்க மட்டும் என்னவாம்? இன்னைக்கும் சைக்கிள் ரேஸ்ல கலந்து கிட்டு மொதப்பரிசு வாங்குவீங்களே. அப்ப எல்லா குமரிப்பொண்ணுங்க கண்ணும் உங்க மேலதானே இருக்கும். சரி சரி இப்போ எதுக்கு இந்தப் பேச்சு. எனக்கு ஒரு நாள் லீவு இருக்கு போய் டிக்கெட் போடுங்க பொங்கலுக்கு ஊருக்கு போகணும் என்று கூறிவிட்டு மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+