ராதா கிருஷ்ணர் திருக்கல்யாணம்… பக்தர்கள் உற்சாகம்
மானாமதுரை: திருப்புவனத்தில் ராதாகிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. ஏரளாமான பக்தர்கள் உற்சவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனத்தில் ஸ்ரீசத்குரு நாம ஸங்கீர்த்தன பஜன் மண்டலி சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ரதா கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், திருவாதாரனத்துடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணர் வீதியுலா நடைபெற்றது. நேற்று காலை உஞ்சவிருத்தியுடன் விழா தொடங்கியது. சிறப்பு அலங்கார கோலத்தில் உள்ள கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருக்கல்யாண சீர்வரிசைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு கிருஷ்ணர்&ராதை சம்பவங்களை எடுத்து கூறும் வண்ணம் சிறுவர் சிறுமியர்களுக்கு வேடம் அணிந்து நடித்து காண்பித்தனர். கோலாட்டம், வெண்ணை திருடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
நண்பகல் ஒரு மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தில் ஆதிநாராயணசாஸ்திரிகள் கிருஷ்ணராகவும் ராஜப்பா ராதையாகவும் மாறி மாலை மாற்றி கொண்டனர், பின் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் பாண்டுரங்கா, கோவிந்தா என கோசம் எழுப்பி பக்தி பரவசத்தில் மூழ்கினர்.

திருக்கல்யாண உற்சவத்தில் ஞானாநந்தர் சுவாமிகள், தியாகராஜ சுவாமிகள், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய பஜனை பாடல்களை மதுரை கண்ணன் பாகவதர் குழுவினர் பாடினர்.
ராதா கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசத்குரு நாம ஸங்கீர்த்தன பஜன மண்டலி தலைவர் ராஜப்பா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications