முத்தம் கொடுங்க… ஓசியில காபி குடிங்க…
முத்தம் கொடுப்பவர்களுக்கு இலவசமாக காபி கொடுக்கும் கிளு கிளு திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி காபி ஷாப் ஒன்று. இதனாலேயே ஓசியில் காபி குடிக்க காதலர்கள் அங்கே குவிகின்றனராம்.
முத்தம் கொடுத்தால் உடல் உற்சாகமடையும், நரம்புகள் புத்துணர்ச்சியடையும் கலோரிகள் கரையும் என்றெல்லாம் நிபுணர்கள் கூறிக் கொண்டிருக்க முத்தம் கொடுப்பவர்களுக்கு இலவச காபி கொடுத்து உற்சாகப்படுத்துகிறது சிட்னியில் உள்ள காபி ஷாப்.

முத்தக் காபி
ஜூன் மாதம் முடியும் வரை மட்டுமே முத்தக் காபி திட்டம் இருக்குமாம். அதுவும் தினசரி காலை 9 மணிமுதல் 11 மணிவரை மட்டுமே முத்தம் கொடுத்தால் இலவச காபி கிடைக்குமாம்.

கிஸ் கொடுக்காவிட்டால் காசு
கடைக்கு வரும் திருமணமான தம்பதிகளோ அல்லது காதலர்களோ தங்களுக்கிடையே முத்தத்தை பரிமாறிக்கொண்டால் அவர்கள் ஆர்டர் செய்யும் காபிக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாறாக கிஸ் கொடுக்க இஷ்டமில்லை என்றால் காப்பிக்கு 225 ரூபாய் கொடுத்து விட வேண்டும்.

அன்பை அதிகரிக்க
ஒவ்வொரு தம்பதியினரிடையேயும் அன்பை மீண்டும் புத்துணர்வு பெறச் செய்யும் நோக்கத்திலேயே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு தன் கடைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

முத்தம் நிஜமா?
அது மட்டுமல்லாது கடைக்கு வரும் ஜோடி கொடுக்கும் முத்தம் உண்மையானதா? அல்லது காப்பிக்காக சும்மா போலியாக கொடுக்கிறார்களா? என்பதை தான் கூர்ந்து வாட்ச் பண்ணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓசியில் சினிமா
கடைக்கு வரும் ஜோடிகள் லிப் டூ லிப் கிஸ் அடிப்பத்தைப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது என்று கூறும் அவர், இந்த திட்டம் தொடர்பான் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
காபி கடைக்கு எப்படி எல்லாம் விளம்பரம் பண்றாங்கப்பா?
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications