டெக்னிக்கிள் 13.. ஒரு தொழில்நுட்ப திருவிழா...

Subscribe to Oneindia Tamil

மனிதகுலம் சந்தித்த ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஐடியா இருக்கும். ஐடியாதான் எந்த ஒரு முயற்சிக்கும், அதன் வெற்றிக்கும் முக்கியக் கருவாக இருக்கிறது. ஐடியா இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது. ஒரு ஐடியாவை கருவாக்கி, அதை வளர்த்து, உருவாக்கி, ஒரு வடிவம் பெறும்போது நிச்சயம் வெற்றியும் சாத்தியமாகிறது. உண்மையில் நல்ல ஒரு ஐடியாதான் பின்னர் எந்த ஒரு செயலுக்கும் உந்து சக்தியாக மாறுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் டெக்னிக்கிள் ஒரு சின்ன ஐடியாவின் விளைவாக உருவானது. இன்று அது மிகச் சிறந்த சிந்தனைகளின் கூடாரமாக உருவெடுத்து வியாபித்து நிற்கிறது. கடந்த 3 மாதமாக மிகப் பெரிய தொழில்நுட்ப- நிர்வாக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை டெக்னிக்கிள் மேற்கொண்டுள்ளது.

டெக்னிக்கிள் 13 என்ற இந்தத் திருவிழாவை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியாக்க டெக்னிக்கிள் தீவிரமாக உள்ளது.

இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் தொடர் சொற்பொழிவுகள். இதில் சமூ்கத்தின் அனைத்து துறைகளையும் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் உரையாற்றுகின்றனர். தங்களது அனுபவங்கள், தங்களின் ஐடியாக்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கு இது பெரும் ஊக்கமாக அமையும்.

ராஸ் சேவேஜ், ஜோனதன் குருடின், பாட் ஸ்பெயின் ஆகியோர் அவர்களில் சிலர். இந்த சொற்பொழிவுகள் மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று கூறினால் அது மிகையில்லை.

இந்த தொழில்நுட்ப - நிர்வாகவியல் திருவிழாவில் கம்ப்யூட்டர் அறிவியல், டிசைன், சிவில், கணிதம், பயோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்கவுள்ளனர். ஆய்வுத் தாள் சமர்ப்பிப்பும் இதில் முக்கிய அங்கமாகும்.

மேலும் முதல் முறையாக சோசியோத்தான் என்ற பெயரில் ஒரு சமூக விழிப்புணர்வுப் பிரசார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இலவச மருத்துவ முகாம், மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு பிவிஎஸ் திலீப்பை 08121881965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.techniche.org இணையத்தளத்திற்கு செல்லலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+