துபாயில் நடந்த முஸ்லீம் லீக் நினைவு நாள் கருத்தரங்கம்: ஏப். 2ல் தமிழகத்தில் பேரணி

Subscribe to Oneindia Tamil

துபாய்: அமீரக காயிதே மில்லத் பேரவை சோனாபூர் கிளை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாள் விழா மற்றும் ஏப்ரல் 2 பேரணி விளக்க கருத்தரங்கம் அப்பகுதி செயலாளர் ரஹமத்துல்லாஹ் தலைமையில் 14.03.2013 அன்று மாலை சோனாபூர் பவர் குரூப் கேம்பில் நடைபெற்றது.

விழாக் குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி முன்னிலை வகித்தார். நிக்ழச்சியின் துவக்கமாக இம்ரான் கான் இறைமறை வசனங்கள் ஓதினார்.

UAE Kaithe Millath Peravai seminar held in Dubai

இந்நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப், அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம்.ஹபீபுல்லாஹ், துபாய் மண்டலச் செயலாளர் முதுவை. ஹிதாயத், அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத், ஷார்ஜா மண்டலச் செயலாளர் தஞ்சை பாட்ஷா கனி, ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீழை ஹமீது யாசின், துபாய் தேரா பகுதிக்கு காயிதே மில்லத் பேரவையின் மற்றொரு செயலாளராக அறிவிக்கப்பட்ட நெல்லை ஜிந்தா ஆகியோர் முஸ்லிம் லீக்கை வலிமைப் படுத்துவதன் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேரணி ஏப்ரல் 2-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இட ஒதுக்கீடு, மது விலக்கு, மற்றும் சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருக்கிறது. பேரணியில் தாயகத்தில் இருக்கும் நமது சமுதாய மக்களையும் நமது உறவினர்களையும் பங்கெடுக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அமீரக காயிதே மில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா, பொருளாளர் கிழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஊடகத் துறைச் செயலாளர் கும்பகோணம் சாதிக், தேரா பகுதி செயலாளர் வி.களத்தூர் ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சோனாப்பூர் ஷஹாபுத்தீன் நன்றி கூறினார்.

அமீரக காயிதே மில்லத் பேரவை தேரா பகுதி செயலாளராக நெல்லை ஜிந்தா தேர்வு!

அமீரக காயிதே மில்லத் பேரவை தேரா பகுதி செயலாளராக நெல்லை ஜிந்தாவை நியமித்து பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+