28ல் துபாயில் முப்பெரும் கோரிக்கை பேரணி விளக்க கருத்தரங்கம்
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை தேரா கிளையின் சார்பில் முஸ்லிம் லீக் 66வது நிறுவன நாள் மற்றும் முப்பெரும் கோரிக்கை பேரணி விளக்க கருத்தரங்கம் வரும் 28ம் தேதி இரவு 7.30 மணிக்கு அல் அயாத் உணவகத்தில் (இன்டெக்ஸ் ஹோட்டல் எதிரில்) நடைபெற இருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலர் வாலன் ஜெ. ஜெய்லான் பாட்சா தலைமை வகிக்கிறார். தேரா கிளை செயலாளர்கள் குண்டு எம்.ஏ. காசிம் ராஜாஜி, நெல்லை ஷேக் சிந்தா, துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ. ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அய்யம்பேட்டை மௌலவி ஹலிலுல்லாஹ் ஜமாலி இறை வசனங்களை ஓதுகிறார்.
விழாக் குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான், அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ஆகியோர் கருத்துரை வழங்க இருக்கின்றனர்.
நிகழ்ச்சியை ஷார்ஜா மண்டல செயலாளர் தஞ்சை ஏ. பாட்சா கனி தொகுத்து வழங்குகிறார். மாமாத்தே ஏ. முஹம்மது யூனுஸ் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
அகில இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழகத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும், இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விசாரணை கைதியாக பல்லாண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.
மேலும் சமீபத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மஹல்லா ஜமாஅத் செயலாளர் கமுதி பஷீர் அவர்களின் மஃபிரத்துக்காக துஆச் செய்யப்படும்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் தஞ்சை அ. பாட்சாகனி 050 676 5812 மற்றும் குண்டு காசிம் ராஜாஜி 055 455 7958 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications