அஜ்மானில் தமிழ்க் கவிஞருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி
அஜ்மான்: அஜ்மானில் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் தாயகம் செல்ல இருக்கும் கவிஞர் இஸ்மத்திற்கு பிரிவு உபசார நிகழ்ச்சி 06.07.2014 அன்று மாலை நடைபெற்றது.
துவக்கமாக இறைவசனங்களை ஜாவெத் அலி மௌலானா ஓதினார். ஏகத்துவ மெய்ஞான சபையின் தலைவர் அல்ஹாஜ் ஏ.பி. சஹாபுதீன் தலைமை வகித்தார். திருமுல்லை வாசல் செய்யது அலி மௌலானா துவக்கவுரை நிகழ்த்தினார்.

மதுக்கூர் ஹிதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். அதிரை அப்துல் ரஹ்மான் முப்பதாண்டு காலத்திற்கும் மேல் அமீரகத்தில் பணிபுரிந்து விட்டு தாயகம் செல்ல இருக்கும் கவிஞர் கிளியனூர் இஸ்மத் ஆற்றி வந்த சமூக, சமுதாய, இலக்கியப் பணிகளை நினைவு கூர்ந்தார். மேலும் தம்முடன் இருப்பவர்களுக்கு அரிய பல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவற்றைத் தெரிவித்து அவர்களது வாழ்வு ஏற்றம் காண உதவி புரிந்து வந்தார் என்றார்.

ஏ.பி. சஹாபுதீன் தலைமையில் கவிஞர் கிளியனூர் இஸ்மத்தின் சேவைகளை நினைவு கூர்ந்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிளியனூர் இஸ்மத் ஏற்புரை நிகழ்த்தினார். தனக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார நிகழ்ச்சி மற்றும் நினைவுப் பரிசுக்கு நன்றி தெரிவித்ததுடன் தனது பணிகள் தாயகத்திலும் தொடரும் எனத் தெரிவித்தார்.

முதுவை ஏ அஹமத் இம்தாதுல்லா நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அதிரை சர்புதீன், ஆழியூர் அபுல் பசர், மன்னார்குடி சேக் தாவூத், முதுவை ஹெச். ஹசன் அஹமது, முதுவை ஏ. ஜஹாங்கீர், மதுக்கூர் அமீர் அலி, மதுக்கூர் ஓ.பி.எம். பஷீர், மதுக்கூர் முஹம்மது சாதிக், அஹமது தஸ்ரிஃப், திண்டுக்கல் நூருல் ஹக், ஆழியூர் பாக்கீர், முஹம்மது, இஸ்மத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications