ஜோதிடமும் அறிவியலே... மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மைய பட்டமளிப்பு விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தி வரும் ஜோதிட படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றத
சென்னை: மதுரையில் உள்ள சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஜோதிடம் பற்றிய பட்டம், பட்டய படிப்புகளை அளித்து வருகின்றன. பி.ஏ., எம்.ஏ., ஜோதிடவியல், டிப்ளமோ ஜோதிடவியல், டிப்ளமோ வாஸ்து போன்ற படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.
2014 - 2016ஆம் ஆண்டு எம்.ஏ படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா கடந்த 25ஆம் தேதி சென்னையில் உள்ள மூலக்கடை வியாபாரிகள் சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. சகிலா சுப்ரமணியன், குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தார். ஜெயலட்சுமி சுப்ரமணியன் கடவுள் வாழ்த்து பாடினார்.

ஜோதிட பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் அ. நவநீத கிருஷ்ணன், பங்கேற்று ஜோதிட கலை வல்லுனர்களுக்கு பதக்கங்களை வழங்கி, பட்டம் அளித்தார். ஜோதிட பேராசான் கே.ஆர். சுப்ரமணியன், தனது மாணவர்களுக்கு "ஜோதிட வாசஸ்பதி" எனும் சிறப்பு பட்டம் மற்றும் கேடயத்தை அளித்தார்.
விழாவில் பங்கேற்ற ஆசிரியர்கள், பி.ஆறுமுகம், கே. சந்தான ராஜசேகரன் ஆகியோர் ஜோதிடத்தில் பிரசன்னம் பற்றி பேசி விளக்கம் அளித்தனர்.
பாதகாதிபதியும் நன்மையே செய்வார் என்று எம்.செந்தில்நாதன் பேசினார். ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு ஏற்ப பாதகாதிபதி பலன்களை கொடுப்பார். எந்த ராசிக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்றும், சர, ஸ்திர, உபய ராசிகளில் நீர், நிலம், நெருப்பு, காற்று ராசிகளில் பாதகாதிபதிகள் அமர்ந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் ஜோதிட ஆசான் செந்தில்நாதன் பேசினார்.

இதே போல விழாவில் பேசிய பி. மாணிக்கவாசகம், கர்மா பற்றி பேசினார். ஜோதிடம், கடவுள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி., அ. நவநீதகிருஷ்ணன், ஜோதிடவியல் மாணவர்களுக்கு சிறப்பு பட்டங்களையும் கேடயங்களையும் வழங்கி வாழ்த்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications