துபாயில் இந்திய துணை கன்சல் ஜெனரலுக்கு பாராட்டு விழா: டிடிஎஸ் இவென்ட்ஸ் ஏற்பாடு
துபாய்: துபாய் டிடிஎஸ் இவென்ட்ஸ் சார்பில் விரைவில் விடைபெற்றுச் செல்ல இருக்கும் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு அவர்களுக்கு பாராட்டு மற்றும் பிரிவு உபசார விழா 21.06.2014 அன்று மாலை அரேபியன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டிடிஎஸ் இவென்ட்ஸ் அமைப்பின் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் துபாயில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பணிமாறுதல் பெற்றுச் செல்ல இருக்கும் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு அவர்கள் தமிழகத்தின் மதுரை நகரைச் சேர்ந்தவர். மிகவும் இளம் வயதில் பன்முக திறமைகளைக் கொண்டவர்.

பிற மாநில தொழில் அதிபர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடும் போது அசோக் பாபு அவர்களின் திறனைக் கண்டு வியந்து பாராட்டும்போது அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடும் போது தமிழ் மக்களின் பெருமைக்குக் காரணமாக திகழ்ந்து வருவது அனைத்து தமிழர்களுக்கும் மகிழ்வளிப்பதாக குறிப்பிட்டார்.

டிடிஎஸ் இவென்ட்ஸ் நிர்வாகி ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், அசோக்பாபு அவர்களுடன் பழகும் போது கன்சுலேட் அதிகாரியுடன் பழகுவது போன்று இல்லாது ஏதோ நமது சகோதரருடன் பேசுவது போன்றதொரு அபிப்ராயத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் குழுவினர் பிரசன்னா, சுந்தர், விஜயேந்திரன், விஜயராகவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் குறிப்பிடும் போது, கன்சுலேட் என்றதும் நாமெல்லாம் நுழைய முடியுமா என்றெல்லாம் எண்ணியிருந்த ஒரு நிலை மாறி ஒரு சகோதரர் இங்கு பணிபுரிகிறார் என்றதொரு நிலையினை ஏற்படுத்தியுள்ளார் துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு.

அசோக் பாபு மற்றும் அவரது மனைவி வித்யா ஆகியோர் தங்களது குடும்பத்தினரைப் பிரிவது போன்ற ஒரு நிலையினை ஏற்படுத்தினாலும் உலகம் மிகச் சிறியது எனவே மீண்டும் சந்திக்கும் வாய்ப்பினை இறைவன் நமக்கு விரைவில் ஏற்படுத்துவான் எனக் குறிப்பிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அசோக்பாபு அவர்கள் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அமீரகத்தில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகளை உலகத் தமிழர்கள் அறியச் செய்யும் செய்தியாளர் முதுவை ஹிதாயத்திற்கு அசோக் பாபு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் டிடிஎஸ் இவென்ட்ஸ் குடும்பத்தினர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications