துரோகங்கள்..!
படைப்பிலேயே ஐம்புலன்களும் அங்கங்களும் அமையப்பெற்றிட்டாலும்
சிலர்க்கு படித்ததும் கேட்டதும் நினைவில் தாங்காது
சிலர்க்கு கூட்டல் கழித்தல் புரியாது...
சிலர்க்கு சொல்வது எதுவும் சுலபமாய் புரிபடாது...
எத்தனை மாற்றுத்திறனாளிகள்
தன் குறை பெரிதாய் நினையாமல்
படைப்பில் கிடைத்த சில புலன்களையும் அங்கங்களையும்
வரங்களாய் கொண்டு சாதனைகள் புரிகின்றார்...

எல்லா புலன்களும் அங்கங்களும் அருமையாய்
பெற்றிட்ட எத்தனையோ மாக்கள் - தன் அறியாமையினால்
சோம்பலாலும் முயற்சின்யிமையாலும்
கிடைத்திடும் வாய்ப்புக்களை புறந்தள்ளுகிறார்...
வரங்களை புறந்தள்ளும் மாக்களுக்கு விந்தைகள் புரியும்
சக்தியை எளிதாய் இனிதாய் தந்தது படைத்தவன் குற்றமா?
வேதனைகள் பெற்று சாதனை செய்யும் அங்கக் குறைபாடுள்ளவனுக்கு
அக்குறையினை வலியாய் தந்ததுவும் படைத்தவன் குற்றமா?
இயல்பிலேயே திறன்கள் பெற்று உணவை முனைப்புடன் வேட்டையாடி
கொன்று தின்னும் கழுகுகள்
இறக்கை சுருக்கி சுகமாய்
பலூனில் பறக்க நினைப்பது போல் - திறன்கள் பெற்றும்
எதற்குமே முயலாமல் சோம்பி நிற்பது அழகாகுமா
காலம், நேரம், வசதி, வாய்ப்பு, நினைவுத்திறன் படைப்பின் வரம்
அனைத்தும் பெற்ற மக்களில்
எத்தனை பேர் வாழ்வில் உயர்கின்றார்?
இவற்றில் சில மட்டும் பெற்ற மக்கள் முயற்சிப்பலனாய்
வாழ்வில் உயர்ந்திட முடியும் எனில்...
கிடைத்த அருமை வரங்களை உரமாகப்பெற்று
சமூகத்திற்கும் பெற்றோர்க்கும்
இனிய பலன்களை நல்காமல் போனால்
உருவான காலத்தில் உள்வைத்து காத்திட்ட தாய்க்கும்
அருமை வரங்களை அவனுக்கருளிய படைத்தவனுக்கும்
ஒருவன் செய்யும் துரோகமன்றோ?
எப்பொருள் கிடைப்பினும் அதன் மதிப்பையறிந்து
கிடைத்தலின் பொருட்டு
செலவிடும் வலியையும் உணர்ந்து
அப்பொருளின் மதிப்பை கூட்டி உழைப்பவர் வலியையும் குறைத்தல்
பெற்றோர்க்கும் சமூகத்துக்கும் செலுத்தும் கடமையன்றோ?
- ஆகர்ஷிணி
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications