துபாய் ஈமான் அமைப்பு கொண்டாடிய அமீரக தேசிய தினம்
துபாய்: துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டரின் சார்பில் அமீரகத்தின் 43வது தேசிய தினம் வெகு உற்சாகமாக 02.12.2014 அன்று காலை முதல் மாலை வரை ஸாபில் பூங்காவில் கொண்டாடப்பட்டது.

துவக்கமாக இறைவசனங்களை காயல் ஈஸா முஹைதீன் ஓதினார். ஈமான் கல்ச்சுரல் சென்டரின் துணைத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார். வருடந்தோறும் ஈமான் அமைப்பு அமீரகத்தில் வசித்து வரும் தமிழக முஸ்லிம் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளைச் செய்வதுடன் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறது.

சிறப்பு விருந்தினர்கள் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மில்லத் முஹம்மது இஸ்மாயில், ஆடுதுறை ஷாஜஹான், முஹம்மது இப்ராஹிம், ஊடகவியலாளர் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.டி. கூரியர் நவாஸ் கனி, ஆலியா முஹம்மது டிரேடிங் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் ஷேக் தாவூது, அரேபியா ஹோல்டிங்ஸ் பொது மேலாளர் அப்துல் ரவூஃப், பிளாக் துளிப் பிளவர் இயக்குநர்கள் அல்ஹாஜ் யஹ்யா, சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், கும்பகோணம் சாதிக், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ஜமால் முஹைதீன், காதர், உஸ்மான், யாக்கூப், ஈஸா, ஷேக் அப்துல்லா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்புற செய்திருந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications