துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி 04.07.2014 அன்று மாலை ஷார்ஜா அபுசகாராவில் உள்ள கிராண்ட் எக்ஸெல்சியர் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 250க்கும் அதிகமான தோப்புத்துறைக்காரர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு புனித ரமலானின் வாழ்த்துக்களையும், மகிழ்வையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்

எம். அபுல் ஹசன் அவர்கள் திருமறை வசனங்களை மொழிந்து நிகழ்ச்சியை துவைக்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் ஆதம் ஆரிப் முன்மொழிந்திட, ஜே.பி. ஜமால் மொய்தீன் வரவேற்புரை நல்கி தொகுத்து வழங்கினார்.
சங்கத்தின் தலைவர் ஹெச். பசுல் ஹக் முன்னுரை வழங்கி தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தித் தந்தார்.
அமீரக இஸ்லாமிய அழைப்பாளர் கீழை ஜமீல் முஹமது இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார் அவருக்கு நினைவுப் பரிசை ஒய்.ஏ. கரீம் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கோவை ஐக்கிய சகோதரத்துவப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், இஸ்லாமியர்களின் தேசப்பற்றினை பாராட்டினார். கடல் கடந்து வாழ்ந்தாலும் தங்களது ஊரினை மறவாது அந்த ஊரின் வளர்ச்சிக்கு அரிய பல திட்டங்களை நிறைவேற்றி வரும் தோப்புத்துறைக்காரர்களை பாராட்டினார். அவருக்கு நினைவுப் பரிசை எஸ். பஷீர் அகமது வழங்கினார்,
எம். ஜே. அவுலியா முகம்மது நன்றி கூற இஃப்தார் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications