ரோஜாப்பூக்களும்... சில முத்தங்களும்...
Subscribe to Oneindia Tamil
ஒற்றை ரோஜாவும்... சிலமுத்தங்களுமாய்...
சந்தோச தருணங்களில்....
காதலோடு பரிசளிப்பாய்!
சண்டையிட்ட தருணங்களிலோ...
எனை சமாதானப்படுத்த
கூடை நிறைய பூக்களும்...

மூச்சு முட்ட முத்தங்களுமாய்....
எனை மூழ்கடிப்பாய்!
சின்னச் சின்னச் சீண்டல்களும்...
செல்லச் சிணுங்கள்களுமாய்...
நம் பொழுதுகள் கழிந்தாலும்!...
தினந்தோறும்....
அதிகாலை நேரத்தில் ...
கன்னத்தில் மீசை குத்த...
முத்தமிட்டு எழுப்பும் தருணங்கள்...
நம் காதலர் தினத்தை...
மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது!.
Lovable couple's celebrates every day valentine's day.












Click it and Unblock the Notifications