குவைத்தில் நடந்த முப்பெரும் விழா
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
குவைத் வாழ் தமிழ் மக்களுக்கான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் 'காயல் மஹ்பூப்' அவர்கள் எழுதிய 'இட ஒதுக்கீடு; பார்வையும், சமுதாய கடமையும்' நூல் வெளியீடும், இவ்வாண்டு சங்கம் ஏற்பாடு செய்த புனித உம்ரா பயணத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் என முப்பெரும் விழாவாக நடந்தது.

கடந்த 4ம் தேதி மதியம் 12:30 முதல் 1:30 வரை குவைத், ஃகைத்தான் பகுதியில் அமைந்திருக்கும் கேடிக்(K-Tic) சங்கத்தின் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடந்த விழாவுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் 'சோதனைக் காலங்களில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்" என்ற தலைப்பில் ஜும்ஆப் பேருரை (ஃகுத்பா) நிகழ்த்த, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் ஜும்ஆ தொழுகையை நடத்த, குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்திருந்த சமூக நல்லிணக்க மாநாட்டின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில அமைப்புச் செயலாளர் 'சிம்மக்குரலோன்' நெல்லை ஜே. அப்துல் மஜீத் அவர்கள் அழகான முறையில் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் தலைவர் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். 'இட ஒதுக்கீடு; பார்வையும், சமுதாய கடமையும்' நூலை சிறப்பு விருந்தினர் வெளியிட தலைவர் பெற்றுக் கொண்டார். பொதுச் செயலாளர் நூல் குறித்த அறிமுகத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
புனித உம்ரா பயணத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
உம்ரா சென்று வந்தவர்கள் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலுக்கு மின்னனு தொழுகை நேர கடிகாரத்தை சிறப்பு விருந்தினர் முன்னிலையில் சங்க நிர்வாகிகளிடம் அன்பளிப்பாக வழங்கினர்.
சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு செயலாளர் மவ்லவீ முஹம்மது ஷஃபீக் நுழாரீ அவர்கள் துஆ ஓத விழா இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் புனித ஜம்ஜம் தண்ணீர், பேரீத்தம் பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications