துபாய் இந்திய கன்சல் ஜெனரலுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் கமிட்டியின் Indian Community Welfare Committee - ICWC ) சார்பியில் எத்தியோப்பியா நாட்டிற்கு இந்திய தூதராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் துபாய் இந்திய கன்சல் ஜெனரலுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி 23.10.2013 அன்று மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் கமிட்டியின் கன்வீனர் கே. குமார் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் விடைபெற்றுச் செல்லும் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மாவின் பதவிக் காலத்தில் நடைபெற்ற பல முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டார்.

அவற்றில் அமீரகத்துக்கு இந்திய ஜனாதிபதி வருகை, சான்றிதழ் அட்டஸ்டேஷன் பணியினை அவுட்சோர்ஸிங் வழங்க முடிவெடுத்தது, ஷார்ஜாவில் இந்துக்களுக்கான மயானம் அமைக்கும் பணி, உம்முல் குவைன் இந்தியன் அசோசியேஷனுக்கு இடம் பெற்றது, அஜ்மான் இந்தியன் அசோசியேஷன் செயல்பாடுகளுக்கு ஆட்சியாளர்களின் கூடுதல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டார்.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் அமீரகத்தில் இந்திய மக்களின் தேவைகளுக்காக எந்த நேரத்திலும் அணுகக் கூடியவர் சஞ்சய் வர்மா எனக் குறிப்பிட்டார்.
இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் கமிட்டியின் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் நினைவுப் பரிசு, பொன்னாடை மற்றும் மலர்க்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
ஏற்புரை நிகழ்த்திய சஞ்சய் வர்மா தனது பணிக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி உள்ளிட்ட நிர்வாகிகள், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி அனீஸ், இந்திய மருந்தாளுநர் சங்க நிர்வாகி முபாரக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், வணிகப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications