அட்லாண்டா தமிழர்கள் கொண்டாடிய 'இருட்டுக் கடை அல்வா’ பொங்கல் விழா!
அட்லாண்டா(யு.எஸ்); அல்வாவுக்கு பிரசித்துப்பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடையிலிருந்து அல்வா வரவழைத்த்து அட்லாண்டாவில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார்கள்.
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் 1300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உறியடி மற்றும் நீயா நானா கோபி நாத்தின் விவாத மேடை என விழா களை கட்டியது.

ஜல்லிக்கட்டு ஏன் அவசியம் என்ற தலைப்பில் முன்னாள் தலைவர் ராஜா உரையாற்றினார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு கருத்தாக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
சமூக ஊடகங்கள் நன்மையா தீமையா?
கோபிநாத்தின் விவாத மேடையில் சமூக ஊடகங்களால நன்மையா தீமையா என்ற தலைப்பில் விவாதித்தார்கள். இளைஞர்கள் சமூக ஊடகங்களை பொறுப்புடன் கையாள்வதாகவும், நடுவயதிற்கு மேற்பட்டவர்கள் தான் சற்று தடுமாறுகிறார்கள் என்றும் கோபிநாத் முத்தாய்ப்பாக கூறினார்.
சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உறியடித்து விளையாடினார்கள்.. கோலப் போட்டி, சக்கரைப் பொங்கல் போட்டிகளும் நடைபெற்றது.
அமெரிக்கர் அசத்திய சிலம்பாட்டம்
சார்லட் நகர சிலம்பாட்டக் குழுவினரின் மான் கொம்பு சண்டை மற்றும் சிலம்பாட்டம் விழாவில் அனைவருடைய பேராதரவைப் பெற்றது.
ஜல்லிக்கட்டும பொங்கல், மாட்டுவண்டி மேடை அலங்கார ஃப்ளெக்ஸ் போடு பின்னணியில், பார்க்கும் போது கூடுதல்ச் சிறப்பு சேர்த்தது.
பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் ஒலிக்க, அமெரிக்கர் கம்பு சுற்றி ஆடியது பார்ப்பவர்களை பரவசமூட்டியது.

இருட்டுக்கடை அல்வாவுடன் விருந்து
விழா நிறைவாக இரவு விருந்தில் திரு நெல்வேலி ஸ்பெஷல் இருட்டுக் கடை அல்வா வழங்கப்பட்டது. ஆளுக்கு 30 கிராம் அல்வா என கிலோக் கணக்கில் தருவித்து இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பிரசித்து பெற்ற இனிப்பகங்களிலிருந்து, தருவிப்பதாகவும் இந்த ஆண்டு இருட்டுக் கடை அல்வாவை தேர்ந்தெடுத்ததாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அதென்ன பொங்கலுக்கு அல்வா என்ற கேள்விகள் ஒரு கணம் எழுந்தாலும், திருநெல்வேலி அல்வா சுவையில் மக்கள் திக்குமுக்காடிப் போய்விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications