For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தம்மாம் மாநகரில் நடந்த ஐ.எஸ்.எப். அரசியல் பயிலரங்கம்!

By Siva
Google Oneindia Tamil News

சவுதி: சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் (ISF) கிளை நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் தம்மாம் (ISF) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண துணைத் தலைவர் மக்தூம் நைனா தலைமை வகிக்க தம்மாம் கிளையின் பொதுச் செயலாளர் ஷேக் முகைதீன் வரவேற்று பேசினார்.

கிழக்கு மாகாண பொதுச் செயலாளர் திப்பு சுல்தான் அறிமுக உரை ஆற்றிட இன்றைய அரசியல் சதுரங்கம் என்னும் தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான் உரையாற்றினார்.

சவால்களும், வாய்ப்புகளும் என்னும் தலைப்பில் உரையாற்றிய கிழக்கு மாகாண தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி தமது உரையின் போது கூறுகையில்,

ISF meet held in Dammam

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் தமது 10 ஆண்டு கால ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் பறிகொடுத்த காங்கிரஸின் சந்தர்ப்பவாத போலி மத சார்பின்மை கொள்கைக்கு எதிரான மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் பரிசீலிக்க வேண்டும். தலித் மற்றும் சிறுபான்மை சமூக மக்களுக்கான தேசிய அளவில் இருக்கும் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் எஸ்.டி.பி.ஐ. தொர்ந்து களப்பணியாற்றிட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் அல்ஹஸ்ஸா, அல்கோபர், தம்மாம், அல்ஜுபைல், அல்சிஹாத் பகுதிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

English summary
ISF branch functionaries meet was held in Dammam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X