டான்ஸ், குக்கிங், பேஷன்... ஆண்களிடம் இல்லாத 10 திறமைகள்
லண்டன்: ஆண்களை விட பெண்கள் சிறந்த ரசனைவாதிகள், டான்சர்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்கள் சிலப்பல விஷயங்களில் பன்முகத் திறமைசாலிகளாகவும், கடின உளைப்பாளிகளாகவும் இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது.
பிராங்க் என்ற ஆராய்ச்சியாளார் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அயர்ன் பண்ணாத ஆண்கள்...
இந்த ஆய்வின் மூலம் பத்தில் ஒரு ஆண் மட்டுமே தனது துணியை தானே அயர்ன் செய்து கொள்வதாகவும், 4 சதவீதமான ஆண்கள் மட்டுமே பெண்களை விட சிறப்பாக நடனம் ஆடுகிறார்களாம்.

துணித் தேர்வு...
துணிந்து தன்னைச் சார்ந்தவர்களுக்கு உடையைத் தேர்வு செய்யும் திறமை வாயந்தவர்கள் பெண்கள். ஆனால், ஆண்கள் தாங்கள் தேர்வு செய்யும் உடை மற்றவர்களுக்கு பிடிக்குமா என்ற குழப்பவாதிகள்.

வாழ்த்து தெரிவிப்பதில்...
தனக்கு அறிமுகமானவர்களின் பிறந்தநாள், மணநாள் உள்ளிட்ட சிறப்பு தினங்களுக்கு வாழ்த்து கூறுவதில் பெண்கள் எப்பவுமே டாப் தான். ஆனால், ஆண்களுக்கு தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் பிறந்தநாள், மண நாள் போன்றவை நில்னைவில் இருப்பதில்லை.

கல்யாண நாளை மற்ந்துட்டேனே....
ஒரு படி மேலே சொன்னால், சில ஆண்களுக்கு அவர்களது திருமண நாளே சில ஆண்டுகளுக்குப் பிறகு மறந்து விடுவதுண்டு எனக் குற்றம் சாட்டப் படுகிறார்கள்.

ஆடலுடன், பாடல்...
வீட்டில் ஆடிப் பாடியபடி வேலைகளை மேற்கொள்வதில் பெண்கள் வல்லவர்கள். மேலும், பெண்களுக்கு இயல்பாகவே நெளிவு, சுளிவான நடன அசைவுகள் ஆடும் வண்ணம் உடலமைப்பு உள்ளது சிறப்பம்சம்.

இஸ்திரி ....
வீட்டில் உள்ளவர்களின் துணிகளை, குறிப்பாக கணவரின் உடைகளை வீட்டிலேயே இஸ்திரி செய்து காசை மிச்சம் செய்யும் சிக்கனவாதிகள் பெண்கள். ஆண்களுக்கு இது போன்ற விஷயங்களில் முதுகு வளையாதாம்.

கைமணம்...
ருசியான சாப்பாட்டை நளபாகம் எனக் குறிப்பிட்டாலும் பணி நிமித்தமாக அன்றி வீட்டில் உள்ளவர்களுக்கு உணவுத் தயாரித்துத் தரும் வழக்கம் ஆண்களுக்குக் கிடையாது. ஆனால், பெண்கள் அன்போடு, ருசியாகவும் சமைத்துத் தருவதில் வல்லவர்கள்.

கவனிப்பாளர்கள்...
அழகுணர்ச்சியில் பெண்கள் தான் டாப். தூரத்தில் வரும் பெண் அணிந்திருக்கும் காது கம்மல் முதற்கொண்டு அனைத்தையும் துல்லியமாக குறிப்பெடுக்கும் புத்திசாலிகள்.

அழகும், ஆரோக்கியமும்...
தன்னையும், தன்னைச் சுற்றி உள்ளவற்றையும் அழகாகவும், சுத்தமாகவும் பேணிக் காக்க விரும்பும் குணாதிசயம் கொண்டவள் பெண்.

சர்ப்ரைஸ் கிப்ட்...
சின்னஞ்சிறு பரிசுகள் மூலம் மற்றவர்களை வசீகரிக்கும் திறமைசாலிகள் பெண்கள். தன்னைப் போலவே தன் கணவரும் தனக்கு பரிசளிக்க வேண்டும் என எதிர்பார்த்து இருவருக்குள்ளும் பிரச்சினைகள் வெடிப்பதுண்டு.

சகலகலா வல்லிகள்...
பன்முகத் திறமைசாலிகளான பெண்கள், அலுவலக வேலையாகட்டும், வீட்டு வேலையாகட்டும், குழந்தை வளர்ப்பாகட்டும் அனைத்தையும் ஒரு சேர கட்டி சமாளிக்கும் திறன் பெற்றவர்கள்.

மாடர்ன் மங்கைகள்...
மாடர்ன் உலகில் அன்றாடம் மாறி வரும் பேஷனுக்குத் தகுந்தவாறு தன்னை தயார் படுத்திக் கொள்வார்கள் பெண்கள்.

தரம் தான் நிரந்தரம்....
வீட்டு உபயோகப் பொருட்களை தேவையறிந்து வாங்குவதில் திறமைசாலிகள் பெண்கள். விலையோடு, தரமானதாகவும் இருக்கும்பொருட்களைத் தேர்வு செய்வதற்காக இருக்கும் இவர்களது தேடல்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications