"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - அத்தியாயம் 4
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 4வது அத்தியாயம் இது.
- லதா சரவணன்
"மீண்டும் ஒருமுறை போன் வந்திருக்கு ஸார்... வேற நம்பர் ஆனா சிக்னல் மட்டும் திருவான்மியூர்ல இருந்துதான்,,,,,!"
"டிரைவர் கண் திறந்திட்டாரா? ஏதாவது விசாரிச்சீங்களா?"
"மயக்கம் தெளிஞ்சிடுச்சு டாக்டர் ட்ரீட் பண்றார். அதனால விசாரிக்க முடியலை" பேசியபடியே இருவரும் உள்ளே நுழைய எதிர்ப்பட்ட டாக்டாரிடம், "எப்படி இருக்கான் டாக்டர்?"

"பெட்டர்."
"விசாரிக்கலாமா?"
"தாராளமா?" அவர் வெளியேற,
"வணக்கம் ஸார்...!" டிரைவர் கைகூப்பினான். காலில் முதுகில் நல்ல அடி, தொட்டிலாய் கட்டிய கையோடு இருந்தான்
"காசி....!"
"நீங்கதான் ஜீவனை தினமும் ஸ்கூலில் கொண்டுபோய் விடறது. என்னாச்சு ?"
"ஸார். நானும் குழந்தையும் கிளாஸ் முடிச்சிட்டு வரும் வழியில் எப்பவும் பழரசம் குடிப்பது வழக்கம்... அதேபோல இன்று காரை நிறுத்தும் போதே யாரோ இரண்டு பேர் வம்பு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க. நான் சுதாரிப்பதற்குள் எங்க வண்டியை விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. அப்போதான் விபத்து ஏற்பட்டுடுச்சு.. அதுக்குப்பிறகு என்ன நடந்ததுன்னு புரியலை. கண்விழிச்சி பார்த்தப்போ இங்கே இருக்கேன்... ஸார் ஜீவனுக்கு ஒண்ணும் ஆயிடலையே?"
"நத்திங்....உங்ககிட்டே சண்டை போட்ட ஆளுங்க எப்படி இருந்தாங்கன்னு தெரியுமா?"
"மாநிறம், ஒருத்தன் உயரமா இருந்தான், ஒருத்தன் குள்ளமா பருமனா இருந்தான். நெற்றியில் பெரிய வடு இருந்தது... ஆ,,,அப்புறம் அவங்க சண்டைபோட்டப்போ என்னைப்பத்தி கோட்டின்னு சொன்ன ஞாபகம்....?!"
"சரி... ரெஸ்ட் எடுங்க காசி"

"சார் பச்சைப்பிள்ளை ஸார்.! அவனுக்கு.....!பேசும்போதே காசியின் கண்கள் கலங்கின...."!
ஈஸ்வர் அவன் தோளைத்தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேற, துரை அருகில் வந்தான். "ஸார் டிரைவர் சொல்றதெல்லாம்....!"?
"உண்மைதான்... துரை அவன் வார்த்தையிலும், கண்களிலும் உண்மையான வருத்தம் இருந்தது.. சரி போன் வந்தது திருவான்மியூர்... காசி சொன்ன வார்த்தையில் கோட்டின்னு ஒரு பேரு வருது. முதல்ல ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அந்த பெயர்லே யாராவது ரெளடி இருக்கானான்ன கேளுங்க...!"
சற்று நேரத்திற்குள் தகவல் வரவும், ஈஸ்வர் கவினுக்கு போனில் ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தான்.. "என்னாச்சு?"
"கோட்டி பாஸ்கர் போனமுறை அடையார் திருட்டு வழக்கில் ஜாமீன் வாங்கிப்போனவன்"
"அவன் இடம் தெரியுமா?"
"தெரியும்... !"
"வண்டியை அங்கே விடுங்க.... துரை நெரிலேயே போய் பார்த்திடலாம்...!" வண்டி பீறிட்டு கிளம்பியது.. புழுதியைச் சுமந்தபடி செல்லும் போலீஸ் ஜீப்பினைக் கண்டு சிலர் பதுங்கிட சிலர் பயந்து வழிவிட அந்த கூரை வேய்ந்த வீட்டின் முன் நின்றது ஜீப்,,,, அதற்குள் பதறியபடி வெளியே வந்த கோட்டி பாஸ்கர்...
"என்ன சாமி! நான்தான் கரெக்டா வந்து கையெழுத்தெல்லாம் போடறேனே ?"
"இது வேற பிரச்சனை ? சாரோட நண்பர் குழந்தையை கடத்திட்டு போய் இருக்காங்க?" "உங்க ஏரியா ஆளுங்கதான்... உனக்கு ஏதாவது ....!"
"அய்யா,,,, எனக்குப்புள்ளைங்க இல்லே சாமி.... கஞ்சா,,, கள்ளசாராயம், ஏன் கொலை கூட செய்து இருக்கேன். ஆனா பச்சைப்பிள்ளையை கடத்திட்டுபோய் கொடுமை செய்ய மாட்டேங்க... நம்புங்கய்யா?"
"இதோ பாரு கோட்டி, உனக்கு யார் மேலாவது....!"
"அப்படியெல்லாம் இல்லேங்க?"
"கோட்டி கடத்திட்டுப்போனவன் பேச்சு வாக்கிலே உன் பேரைத் தான் சொல்லி இருக்கான் அதுக்கு சாட்சி இருக்கு,,, நீ இப்போ தப்பிக்க முடியாது.. மரியாதையா
உண்மையை சொல்லிடு இல்லேன்னா... முட்டி பேந்திடும்.?!"
"அய்யா.. நான் ... எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேங்க.. ஆனா யார் செய்து இருப்பாங்கன்னு தெரியும்...!"
"யாரு?"
"நம்ம பிச்சுவா வேலு ஸார்.. அவன்தான் முன்பு நாங்க கூட்டா தொழில் செய்தப்போ நம்ம தெருமுனை அய்யர் புள்ளையை கடத்திட்டான் .. அதிலேதான் எங்களுக்குள்ளே பிரச்சனையே வந்தது."
"நீ பொய் சொல்லலையே? இல்லை என்பதுபோல் தலையசைத்தான்.. சரி அவன் எப்படி இருப்பான்..?"
கோட்டி சொன்ன அடையாளமும் காசி சொன்ன அடையாளமும் ஒத்துப்போக "அவன் இப்போ எங்கே இருப்பான்னு தெரியுமா? என்றான் உக்கிரமாய் ஈஸ்வர்.
(தொடரும்)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications