உம்முல் குவைனில் பிறைமேடை மாதம் இருமுறை அறிமுக நிகழ்ச்சி
துபாய்: துபாயில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உம்முல் குவைன் அமீரகத்தில் பிறைமேடை வாசகர் வட்டத்தின் சார்பில் 13.12.2013 அன்று காலை பிறைமேடை இதழ் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் உம்முல் குவைன் அமீரக செயலாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் வரவேற்புரை நிகழ்த்தினார். பிறைமேடை இதழ் அமீரகம் முழுவதும் பரவலாக்குவதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் பிறைமேடையை அறிமுகம் செய்து வெளியிட்டார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்று இன்று நாடாளுமன்றத்தில் வேலூர் தொகுதியின் பிரதிநிதியாக மக்கள் சேவையாற்றி வரும் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சமுதாய விழிப்புணர்வு செய்திகளைத் தாங்கி பிறைமேடை இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. அமீரகமெங்கும் பிறைமேடை இதழை பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களின் பணி சிறக்க வாழ்த்தினார்.
நிகழ்வில் திண்டுக்கல் ச.ம.உ. ஜமால் முஹைதீன், சீர்காழி சகோதரர்கள் அம்ஜத் கான், அஹமது ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications