அபுதாபியில் நடந்த மீலாது நபி விழா
அபுதாபி: அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் கடந்த 30.01.2014 அன்று (ஹிஜ்ரி 1435, ரபியுல் அவ்வல் - பிறை 29) இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் இஷா தொழுகைக்கு பின் மீலாது நபி விழா நடைபெற்றது.
ஜமாஅத்தின் தலைவர் எம். ஷூஐபுதீன் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத் முன்னாள் தலைவர் ஹாஜி டி.ஏ. முஹம்மது ஹஸன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத்தினை உடுமலைப்பேட்டை மௌலானா மௌலவி இப்ராஹிம் ரஷாதி அவர்கள் ஓதினார், ஜமாஅத்தின் துணைத் தலைவர் ஏ.ஆர். இஸ்மத்துல்லாஹ் வரவேற்றுப் பேசினார்.

காயல்- மௌலானா மௌலவி ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்லரி (மீலாது விழாக்களை ஏன் நடத்த வேண்டும் என்பது குறித்தும்), மௌலவி எம். முஹம்மது அய்யூப் (அல்ஜமா இஸ்லாமிக் பைத்துல்மால், ஜமாஅத் ஒற்றுமை குறித்தும்), பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிறுவனர் ஹமீது ஹாஜியார் அவர்கள் (மீலாது விழாக்களால் சிறப்பு, லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சிகளை அபுதாபியில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து செய்வதன் சிறப்பு பற்றியும்), ஆவை முஹம்மது அன்சாரி அவர்கள் (அபுதாபியில் உள்ள எல்லா ஊர் ஜமாஅத்துகளும் ஒன்றிணைந்து புதிய கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதன் சிறப்பு பற்றியும்) வாழ்த்துரைகளை வழங்கினார்கள். ஜமாஅத்தின் துணைப் பொருளாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்கள் (ஜமாஅத்தின் நிலைபாடு, ஒற்றுமை பற்றியும்), ஜமாஅத்தின் தலைவர் எம். ஷூஐபுதீன் அவர்கள் (அல்லாஹ் வழங்கி உள்ள நிஃயமத்துகளை பிறருக்கு கொடுப்பதன் சிறப்பு பற்றியும்) உறை நிகழ்த்தினார்கள்.

பின்பு அழைப்பை ஏற்று வருகை புரிந்திருந்த கௌரவ விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிள் அல்ஹாஜ் எம். முஹம்மது காஸிம் பாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் (பெருமானார் ஸல்... அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஒற்றுமை, ஐக்கியம், விட்டு கொடுத்தல், இபாதத் குறித்து) மிகத் தெளிவான சிறப்பு பயான் செய்தார்.

நன்றி உறையினை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ. ரபி அஹமது அவர்கள் கூற, ஹஜ்ரத் அவர்களின் துஆவுக்குப்பின் அணைவருக்கும் சீரணி உணவு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினர்களாக அய்மானின் பொருளாளர் அல்ஹாஜ் ஜமாலுதீன் அவர்களும், இந்திய முஸ்லிம் பேரவை (IMF) தலைவர் அல்ஹாஜ் அப்துல் காதர் அவர்களும் வருகை புரிந்திருந்து சிறப்பித்தார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications