அமீரகத்தில் நடந்து வரும் மனிதநேய மக்கள் கட்சி நிகழ்ச்சிகள்: தமிழர்கள் வரவேற்பு
துபாய்: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரியும், மாநில அமைப்புச் செயலாளர் ராசுதீனும் ஐக்கிய அரபு நாடுகளில் கட்சி ரீதியான சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.
கடந்த 7ம் தேதி அன்று அபுதாபியில் மர்ஹபா வெல்பேர் அசோசியேஷன் சார்பில் பல்வேறு தமிழக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கடந்த 9ம் தேதி மமக பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்க கூட்டமும் எழுச்சியாக அமைந்தது. பல்வேறு ஜமாத்களின் பிரதிநிதிகளும், பல்வேறு கட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் படித்த இளைஞர்களும், பல்வேறு முக்கிய துறைகளில் செல்வாக்குடன் பணியாற்றும் நண்பர்களும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி நுழைவாயிலுக்கு மறைந்த இடதுசாரி தலைவர் ஏ.பி. பரதன் அவர்களின் பெயரும், அரங்கத்திற்கு சமூக சேவகர் செங்கிஸ்கான் பெயரும் சூட்டப்பட்டு நிகழ்ச்சி பன்முகத்தன்மையோடு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் கட்சி நிலைபாடு, அரசியல், சமூகம் குறித்து மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிமுன் அன்சாரி தெளிவாக விளக்கமளித்தார்.

நிகழ்ச்சிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையேற்றார். துபாய், ஷார்ஜா, அல் அய்ன், அபுதாபி மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 1 வாரத்தில் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திக்காட்டிய துபாய் மண்டல செயலாளர் யூசுப்ஷா உள்ளிட்ட அனைவருக்கும் பொதுச் செயலாளர் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை சமூக இணையதளங்களில் பார்த்து சகோதர சமுதாயங்களை சேர்ந்த பலரும் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ள நிவாரணத்தில் உதவி செய்த அனைத்து தமிழர்களுக்கும் பொதுச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications