உலகத் தொல்காப்பியக் கிளையின் மாதாந்திர தொடர்ப்பொழிவு.. நாளை புதுவையில்
புதுச்சேரி: தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நடைபெற உள்ளது. தாங்கள் முதல் பொழிவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
நாள்: 08. 02. 2016, திங்கள் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30
இடம்: செகா கலைக்கூடம் (Sega Art Gallery), நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன்
நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன்
முன்னிலை: புரவலர் அரங்க. மாரிமுத்து
சிறப்புரை: முனைவர் தெ. முருகசாமி, மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி
நன்றியுரை: செ. திருவாசகம்
மேலும் தொடர்புக்கு:
முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / திரு செ. திருவாசகம் + 9585509560 / முனைவர் மு.இளங்கோவன் + 9442029053
உலகத் தொல்காப்பிய மன்றம் 2015, செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சில் தொடக்க விழாவினைக் கண்டது. அதனை அடுத்து கனடா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இதன் தொடக்க நிகழ்வுகள் சிறப்பாக நடந்தன. உலகத் தொல்காப்பிய மன்றம் ஆய்வு நோக்கில் சில பணிகளை அமைதியாகச் செய்துவருகின்றது.
விரைந்து அப்பணிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இந்நிலையில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவினை மாதந்தோறும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் மாலை 6.30 மணி முதல் 7. 30 மணி வரை ஒருமணி நேரம் தொல்காப்பியம் குறித்த ஆய்வுரையை அறிஞர் ஒருவர் வழங்குவார். தொல்காப்பிய நூலின் அமைப்பு, மூலப்பதிப்புகள், மொழிபெயர்ப்புகள், உரைகள், தொல்காப்பிய ஆய்வுகள் குறித்து அறிஞர்களின் பொழிவுகள் அமையும்.
புதுச்சேரி நகரில் நடைபெறும் இந்த நிகழ்வுக்குத் தமிழ் அன்பர்களும், தொல்காப்பிய ஆர்வலர்களும் வருகை தரலாம். புதுவை நிகழ்வினை முனைவர் ப. பத்மநாபன் அவர்களும், செ. திருவாசகம் அவர்களும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும் ஒருங்கிணைக்க உள்ளனர்.
நன்றி: http://muelangovan.blogspot.in/
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications