சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா
சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
புக்கிட்: சிங்கபூர் புக்கிட் பாஞ்சாங்கில் 11-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் எழுச்சியுடன் நடைபெற்றது.
உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு.
தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய விழா கடந்த 21.1.18 ஞாயிறு அன்று சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்,பெண்டிங் LRT அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

டாக்டர் தியோ ஹோ பின் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், வடமேற்கு மாவட்ட மேயருமான டாக்டர் தியோ ஹோ பின் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவின் சிறப்பு அம்சமாக,சிங்கப்பூர் சாதனை முயற்சியாக சீன மலாய்காரர்களின் நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிவகுப்பு நடைபெற்றது.

கிராமிய கலை நிகழ்ச்சிகள்
அத்துடன் சிங்கப்பூர் புகழ் மணிமாறன் குழுவினரின் இசை,நடனம்,கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமிய பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சியுடன் கிராமிய சூழ்நிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. 11வது ஆண்டாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவில், இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான பரோட்டா செய்முறை விளக்கம் காண்பதோடு, அனைத்து இனத்தவரும் ஒரே நேரத்தில் பங்குகொண்டு பரோட்டா செய்யும் காட்சி இடம்பெற்றது என்று பெ மூர்த்தி PBM ஏற்பாட்டுக்குழு தலைவர் கூறினார்.

சிந்தனை உரை
மேலும் விழாவை மெருகூட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை கண்டு மகிழந்தனர். பொங்கல் விழாவின் சிறப்பு அம்சமாக ஜோதி மாணிக்கவாசகத்தின் சிந்தனையை தூண்டும் தமிழர் திருநாள் சிறப்புரை இடம்பெற்றது. பலதரப்பு மக்களும் குடும்பத்தோடு கலந்துகொண்டு இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடதக்கது

எழுச்சி விழா
இவ்விழாவினை புக்கிட் பாஞ்சாங் CC ஏற்ப்பாடு குழுவுடன் இணைத்து லிஷா, அரசகேசரி சிவன் கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) சிறப்பாக செய்த்திருந்தனர். மிகவும் எழுச்சியுடன் இந்த பொங்கல் விழா நடைபெற்றது.
செய்தி வெளியீடு - கார்த்திகேயன் நடராஜன், சிங்கப்பூர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications