பாரதிதாசனின் நிறைவேறாத 3 ஆசைகள்: அஜ்மான் முத்தமிழ் இலக்கிய நிகழ்வில் முனைவர் மன்சூர் பேச்சு
அஜ்மான்: கடந்த 7ம் தேதி அன்று அஜ்மான் சிவ ஸ்டார் பவனில் இரவு 9.00 மணியளவில் முத்தமிழ் மழை நிகழ்வும், கவிஞர் காவிரிமைந்தன் பிறந்த நாள் விழாவும் இனிதே நடைபெற்றன.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த் தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. விழாவிற்கு ஈ.டி.ஏ நிறுவனத்தின் மூத்த செயல் இயக்குனர் திரு. அன்வர் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார். தனக்கே உரித்தான பாணியில் தமிழ் அருவிபோல் சொற்களைக் குவித்து சொல்லோட்டம் நடத்தினார். கவிஞர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அளவான வார்த்தைகளால் அலங்காரம் செய்து விழாவைத் தொகுத்தளித்தார் திண்டுக்கல் ஜமால் அவர்கள். திரு. ஏ. என். சொக்கலிங்கம், திருவிடச்சேரி எஸ். எம். பாரூக் அவர்களும் வாழ்த்துரை வழங்கிட திருமதி நர்கீஸ் பானு அவர்கள் காவிரிமைந்தன் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை வாசித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடியில் இருந்து கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்களும், மதுரையில் இருந்து மனிதத் தேனீ சொக்கலிங்கம் அவர்களும், கம்பத்திலிருந்து பேராசிரியர் மன்சூர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் தலைமை ஏற்ற அன்வர் பாஷா அவர்களுக்கு ஏ என். சொக்கலிங்கம் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். சொக்கலிங்கம் அவர்களுக்கு கவிஞர் காவிரிமைந்தன் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை திருமதி வள்ளி அழகப்பன் வழங்கினார். பேராசிரியர் மன்சூர் அவர்களுக்கு கவிஞர் ஜியாவுதீன் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை கவிஞர் ரமணி வழங்கினார். பழனியப்பன் அவர்களுக்கு நிஜாம் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை முதுவை ஹிதாயத் வழங்கினார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள் நூல்.. அழகப்பன், ஹிதாயத்துல்லா மற்றும் யூசுப் ஆகியோரால் வழங்கப்பட்டது.

உலகத்தின் தொன்மை மிகுந்த உயிர்ப்புள்ள நகரங்களில் அன்றும் இன்றும் முதன்மை வகிக்கும் மதுரையில் இருந்து 15500 நிகழ்ச்சிகளுக்கு மேலாக பங்கேற்று சிறப்புரை, தலைமையுரை ஆற்றிய கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத் தேனீ சொக்கலிங்கம் தனது இயல்பான பேச்சால் இதயங்களைக் கவர்ந்தார். நகைச்சுவையோடு பல்வேறு தகவல்களை அள்ளிக் கொடுத்ததோடு வாழுகின்ற மண்ணின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீங்கள் வாழ்வதும், அயலக மண்ணில் தமிழை போற்றி வருவதும் பாராட்டுக்குரியவை என்றார்.
பழ. பழனியப்பன் அவர்கள், அகமும் முகமும் தமிழால் நிரம்ப கம்பனில் தோய்ந்த காரணத்தால் இன்பத்தமிழ் நுகர கம்பனைப் பற்றியும் கம்ப ராமாயணம் பற்றியும் நுணுக்கமான பல தகவல்களைப் பகிர்ந்தார். பழமையின் பெருமைகள் உட்கொண்டு எதிர்காலம் நோக்கிய சிந்தனையோடு தற்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதால் காலத்தை வென்று நிற்கும் காவியமாய் கம்பனின் படைப்பு காலத்தை வென்று நிற்கிறது என்றார்.

கம்பம் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்கள் தமது சிறப்புரையில், தன்னை கவர்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகள் மிகச் சரியாக பதியப்படவில்லை என்றார். மேலும் பாரதிதாசனின் மூன்று ஆசைகள் - ஒரு முறை விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், பாரதி பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றும், மாபெரும் நூலகம் ஒன்றை உருவாக்கவும் ஆசைப்பட்டார். அவை நிறைவேறாமலே உயிர் நீத்தார்.
அவர் இறந்தபோது அவர்தம் உடலை புதுவை எடுத்துச் செல்லக் கூட வசதியில்லை. இன்றோ அவர் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கிறது. பல்லாயிரம் தமிழ்ச் சான்றோர்கள் அதில் உருவாக்கப்படுகின்றனர் என்று உருக்கமுடன் குறிப்பிட்டு வாழும்போது கவிஞர்களை தமிழ்ச் சமுதாயம் போற்றிடக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
கவிஞர் ரமணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுதீன், திருவிடச்சேரி எஸ். எம். பாரூக், முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால், ஜெயராமன் ஆனந்தி, கவிஞர் ரமணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications