காவிரிக்கு வழியை விடு.. ஸ்டெர்லைட்டை மூடு.. ஆஸ்திரேலியாவில் எதிரொலித்த தமிழர் முழக்கம்- வீடியோ
Recommended Video

சிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கட்சிகள் சார்பிலும், தன்னெழுச்சியாகவும் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மே 3ம் தேதிக்குள், காவிரி தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்ட வரைவுடன் வருமாறு உச்சநீதிமன்றம், இன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம்
அதே போல், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும், தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர ஆலை விரிவாக்க பணிகளை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுக்க வாழும் தமிழர்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து தங்களது ஆதரவை பதிவு செய்யது வருகிறார்கள்.

விக்டோரியா நாடாளுமன்றம் எதிரே
இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த விவகாரங்களுக்காக தமிழர்கள் ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் விக்டோரியா நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணா நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.

முழக்கம்
இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர். "தடை செய், தடை செய், ஸ்டெர்லைட்டை தடை செய், கொண்டு வா, கொண்டு வா, காவிரியை கொண்டுவா, அமைத்திடு, அமைத்திடு, காவிரி ஆணையம் அமைத்திடு, தாமிர லாபம் உனக்கு, புற்றுநோய் எனக்கா, வழியைவிடு, வழியைவிடு காவிரிக்கு வழிவிடு, வாழவிடு, வாழவிடு, தமிழர்களை வாழவிடு" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பதாகைகள்
போராட்டத்தில் பங்கேற்ற, ஆண்களும், குழந்தைகளும், பெண்களும், கோரிக்கையை வலியுறுத்திய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். தமிழர்களின் இந்த தர்ணா போராட்டத்தை அவ்வழியாக சென்ற ஆஸ்திரேலியர்களும் பார்த்து, இதுகுறித்து விளக்கம் கேட்டதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது. மொத்ததில், கிழக்கேயுள்ள ஆஸ்திரேலியா முதல் மேற்கேயுள்ள அமெரிக்காவரை தமிழர்களுக்கான குரல் தமிழர்களால் எழுப்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இந்த ஒலி மத்திய அரசு காதுகளில் விழுமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications