துபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
துபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது.
துபாய் : 41 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சார்பில், 7ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி தேரா துபாய் முதீனா பகுதியில் அமைந்துள்ள கிரேண்ட் எக்ஸல்சியர் ஹோட்டல் வளாகத்தில் சிறப்புடன் நடந்தேறியது.
தோப்புத்துறையின் முஸ்லிம் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ஏ. எம். ஒய். சகாபுதீன் தலைமை ஏற்றிருந்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக ஜெ.ஜெமீஷா அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க சங்கத்தின் செயலாளர் எம். ஜெ. அவுளியா முகம்மது வரவேற்புரையாற்றினார். எம். முகம்மது கௌது, ஜே. பி. ஜமால் மெய்தீன் மற்றும் பி. எஸ். சிராஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் ஈமான் சங்கத்தின் தலைவர் PSM.ஹபிபுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் முகம்மது யாசீன் , முதுவை ஹிதாயத் அவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர் . கீழக்கரை பிரமுகர்கள் அல்ஹாஜ் ஹமீத் ஜுபைர், சென்னை எலைட் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சதக் அன்சாரி, சென்னை கிரசெண்ட் கல்லூரியின் பொருளாளர் அசன் தம்பி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஏறக்குறைய 450 அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியினை, எம். ஜே. அபுல்ஹசன் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக எம். எஸ். முஜீப் ரஹ்மான் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோப்புத்துறை சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இஃப்தார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications