வா.. வா... என் அழகிய சிட்டுக்குருவியே!
- ஆகர்ஷிணி
குருவியே! பழுப்பு நிற அழகு சிட்டுக்குருவியே!
சிறுவயதில் நான் பார்த்த குறுகுறு குட்டிக்குருவியே!
அரும்பரும்பு தானியங்களை அழகாய் கொத்தும் சிறு அலகு
நொடிக்கொரு தரம் திரும்பி கொத்திடும் அழகென்ன!.....
மரத்திலும் துணிக்கொடியிலும் அமர்ந்தே நீயும் எச்சமிடுவாய்!
அப்போதெல்லாம் துணியை அசுத்தம் செய்ததாலே
செல்லமாய் நானும் கோபித்தே சுத்தம் செய்திட்டேன்!
எத்தனை வருடங்களோ தெரியவில்லை, உன்னை பார்த்தே!....
இப்போது நானும் நினைக்கிறேன்! ... உன்னைக் கண்ட நாட்களில்
உன் அழகு சேட்டைகளை காணும் ஆவலில்
உன் பின்னே என் கவனமெல்லாம்...
"என்ன செய்யுறே? படிக்காமல்?" திட்டு வாங்கினேன் அம்மாவிடம்!
காலமெல்லாம் ஓடியே போய் விட்டது
நீ கண்ணிலிருந்து மறைந்தது கூட தெரியாமல்!
இன்று உன்னை தேடுகிறேன், ஒரு சேதி சொல்ல...
நீ காவிரி படுகையில் கொத்திய நெல்வயல்கள் இன்று பற்றியெரிகின்றது!
நீயும் பார்த்திருப்பாய்... உன்னை போலவே நாங்களும்
செய்வதறியாது தவிக்கின்றோம்! புலம்புகிறோம்!
நீயும் புலம் பெயர்ந்த அகதியாய் வேறு ஊருக்கு பறந்து போ!
உனக்கும் எமக்கும் சோறூட்டிய விவசாயிக்கு நீயும்
பாதுகாப்பான ஊரெதென்று கூட்டிப்போய் விடு!
இனிமேல் நீ இங்கு வந்தால் உலர்த்திய துணிமேல் எச்சமிட்டால்
செல்லமாய் கூட கோபிக்க மாட்டேன் நானும்!
என் தலை மேல் நீயமர்ந்து கொண்டாலும் கொஞ்சிடுவேன் நானே!
உன்னை கண்டாலே கொண்டாடிடுவேன் நானே...
வா.. வா... என் அழகிய சிட்டுக்குருவியே!

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications