தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு
68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேரவான படங்கள், கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு கிடைத்த விண்ணப்பங்கள் மற்றும் நாங்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மிக கடினமான கொரோனா காலங்களில் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டன," என்று கூறினார்.ஃபீச்சர் திரைப்படம் அல்லாத பிரிவுக்கான நடுவர் குழுவுக்கு சித்ரர்த்த சிங் தலைமை தாங்கினார். மேலும் சினிமா குறித்த சிறந்த எழுத்தாளர் என்ற பிரிவுக்கு பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் தலைமை தாங்கினார்.விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் அவை தேர்வான பிரிவுகளின் விவரம் கீழே;













Click it and Unblock the Notifications