அடங்காத கண்ணீர்- தமிழரசன்
சென்ற திசையெல்லாம்
கொத்தெலும்பையும்,
கோவனத்தையும் தவிர வேறென்ன
நான் பார்த்தேன்;
கலப்பையையும்,
கஞ்சிக்கலயத்தையும்
தூக்கிக்கொண்டு,
தேடிக்கொண்டிருக்கிறான் - அங்கே
வாழ்க்கையை;
கைக்குட்டையும்,
கண்மையுடனும் - வந்து
கருத்துக்கூறிக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்
மனித உரிமையைப்பற்றி!
அவமானங்கள் ஆயிரமாயிரம்,
அசிங்கத்தின் சின்னங்கள் அங்கே
சிம்மாசனத்தில்,
அவதானித்து செல்கிறேன் - நான்
அஹிம்சைவாதி!
வாயடைத்துதான் நிற்கவேண்டும்,
வாய்ப்பு கிடைக்கும் வரை;
வயதாகிக்கொண்டிருக்கிறது என்
கனவுகளுக்கு,
கற்சிலை அமைக்க துடிக்கிறேன்,
கல்லறை வடிவில் அல்ல!
காரியம் நிச்சயம் கைகூடும் - நான்
சாமியாரைக் கேட்கவில்லை!
ஆயிரம் சாமியார்கள் உண்டு - நாட்டில்
அமைதி எங்கும் இல்லை!
ஆயிரம் கோயில்கள் உண்டு - நாட்டில்
சாமிக்குப் பஞ்சமில்லை;
எரிகிறது,
வயிறு மட்டுமல்ல,
ஊரும்தான் - விளக்கைத்தவிர!
எமன் இருப்பது மட்டுமே உண்மை;
எருமையில்தான் வருவானா?!
எதிர்பார்க்க வேண்டாம்;
அழகென்று நினைத்த
அலையிலும் வருவான்;
மனிதனை மனிதனே கொல்கிறானாம்?!
தாங்காமல் தவித்தவன் தவம்
கலைந்து விட்டது;
ஆடிவிட்டான் அவன்
கோர தாண்டவம்;
அடங்கிப்போயிருக்கும்
அவன் பசி;
அடங்கவில்லை - என்
கண்களில் கண்ணீர்!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications