For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடிந்து போன சிக-ரெட்டுகளும்மிச்சமிருக்கும் விவாதங்களும்- ஆதவன் தீட்சண்யா

By Staff
Google Oneindia Tamil News

முதலில்
கழிப்பிடம் என்றதும்
-ஸெப்டிக் டேங்க்கை விழுங்கியதான
முகச்சுளிப்பின்றி சமனிலை காக்கவும்

Toiletபின்
கழிப்பறைகளை
மலஜலம் -தாடர்பான-தென்றும்
பீடி சிக-ரெட் அரக்கிய வடுவேறி
பினாயில் ஆசிட் மூத்திர உப்பில்
அரிபட்டச் சுவரும் -பெயர்ந்தத் தாழுடனும்
அடிபாகம் -வெற்றிலைக்காவியேறிய
சச்சதுர அறை என்பதுமான
கற்பிதங்களை விட்-டாழிப்பது நல்லது

நாராச வசவில் அரண்-டெழுந்தும்
பீளையோரம் -தொக்கும் கனா
பரிமாறவும் படிக்கவும் ஏலாது
மாரோரம் நையும் காதல் கடிதம்
மங்கலில் புரளும் பிடிபடாக் கவிதை
-தாடையிடுக்கு நமைச்சல்
ஜட்டிக் கிழிசல்
கடவுச்சீட்டின்றி பயணம் போக
இன்னும்
பகிரவியலாத காரியம் பலதுக்கும்
நாடோடி மனம் தங்கும் கூடாரமாயும்
காலம் நேர்ந்துவிட்டதாக எஞ்சியிருப்பது
கழிப்பிடம் மட்டுமே

அவர்கள் கக்கூசுக்கு இவர்களும்
இவர்களுடையதற்கு அவர்களும்
எப்போதாவது வருவ-ரென நம்பி
கரித்துண்டு பச்சிலைகளால்
முகவரி -தொலைபேசியிலக்கம் சங்கேதக்குறி
கேள்விபதில் உடன்படுதல் சார்ந்த
ஓவியம் கவிதை -செய்திகள்
உறைந்தும் உயிர்த்தும் அங்கே
ஒடுக்கப்பட்ட இலக்கியத்தின் வீர்யத்தோடு

நீங்களோ
பால் இன வர்க்கபேதங்களை
கக்கூஸ் வரை நீட்டித்து
வாசித்தறியும் நல்வாய்ப்பை மறுக்கிறீர்
(இருந்தும் அரவாணிகளுக்கு தனித்தறிவதில்
தோல்வியுற்றதை மறைக்கிறீர்)

ஒன்றும் குடிமுழுகிப் போகாது
(போனாலும் போகட்டும்)
உளுத்த பண்பாட்டுக் கதவுகளை
-கொஞ்சம் அகட்டி வையுங்கள்
காற்றைப்போல்
எல்லோரும் எல்லாவிடமும்
-சென்றுவரத் தேவையிருக்கிறது

மோட்சவீடு பற்றி முழங்கும் மதங்கள்
மோட்சக் கழிப்பிடம் குறித்து மூச்சுவிடுவதேயில்லை
கடவுள்/சாத்தான் ஆசிர்வதிப்பில்
இப்பிறவியிலேயே எமக்கு கழிப்பிடம் கிடைக்க
தியான மண்டபங்களூம் தேவாலயங்களூம்
அவ்வாறே மாறுவதாகுக

காவல் நிலையம் நீதிமன்றம்
சிறைச்சாலை ராணுவக்கேந்திரம்
-தாழிற்கூடம் தூதரகம்
அரசாங்க அலுவலகம் அணு உலைகளோடு
மூளையை கருக்கும் கலாசாலைகளையும்
தனிமை காத்து நிற்கும் கழிப்பிடங்களாக்கவும்

கட்டணக்கழிப்பிடங்களில்
கிரெடிட் கார்டுகளை ஏற்கவும்

உணவுக்கூடங்கள் எந்தளவிற்கு -வெளிப்படையோ
அந்தளவிற்கு கழிப்பிடங்கள் அந்தரங்கமானவை-யன்றும்
அரசியல்சட்டத் திருத்தம் -செய்ய
நடப்பு கூட்டத்-தொடரிலாவது
மசோதா -கொண்டு வந்தாகணு...

என்னது,
இ-தல்லாமா கவிதை என்கிறீகளா?
சரி,
அதையும் விவாதிப்போம்
யாரிடத்தில் சிக-ரட் மிச்சமிருக்கு...?

- ஆதவன் தீட்சண்யா([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. கடவுளின் கண்கள்
2. வேறு மழை
3. அதிர வருவதோர் நோய்
4. புது ஆட்டம்
5. கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X