ஆசை
கொட்டும் பனியிலும் வியர்த்திட ஆசை
குதிக்கும் அருவியில் குடியிருக்க ஆசை
சிட்டுக்குருவி போல் சிறகடிக்க ஆசை
சின்னக் குழந்தையாய் தவழ்ந்திருக்க ஆசை
வானம் வரை உயர்ந்திருக்க ஆசை
வானவில்லில் ஒளிந்திருக்க ஆசை
மேகம் போல மிதந்திருக்க ஆசை
மேதை போல மிளிர்ந்திருக்க ஆசை
ஓடை போல ஓடிவிட ஆசை
வாடை போல கூடிவிட ஆசை
செந்தமிழாய் செழித்திட ஆசை
வந்தவரையெல்லாம் வாழ்த்திட ஆசை
சிந்தனையில் உயர்விருக்க ஆசை
செல்வத்தில் உயர்ந்திருக்க ஆசை
வள்ளுவனாய் வாழ்ந்திருக்க ஆசை
வள்ளல்கள் போல வழங்கிவிட ஆசை
தென்றலாய் வீசிட ஆசை
தெம்மாங்காய் பேசிட ஆசை
துண்பங்கள் தொலைந்திருக்க ஆசை
துயரங்கள் தொலைத்திருக்க ஆசை
பாரதியாய் கொதித்திருக்க ஆசை
பாவியாய் பசித்திருக்க ஆசை..
பட்டாம்பூச்சிகள் பிடித்திருக்க ஆசை
பட்டம் பதவிகள் முடித்திருக்க ஆசை
செலவுகள் இல்லாத வரவுகள் ஆசை
வறுமையே இல்லாமல் வாழ ஆசை
காதல் முளைக்காத கல்லூரி ஆசை
காமம் திளைக்காத நட்பு ஆசை
வெற்றிகள் எனைத்தேடி வந்திட ஆசை
வேள்விகளால் உலகை வென்றிட ஆசை
தனிமைகளில்லாத இரவுகள் ஆசை
இனிமையில் எப்போதும் இருந்திட ஆசை
சாதிகளில்லாத சமுதாயம் ஆசை..
மதங்களே பிடிக்காத மனிதாழுகள் ஆசை..
எதிரியே இல்லாத நட்புகள் ஆசை
எதிரிலே சொர்க்கங்கள் இருந்திட ஆசை
சத்தங்கள் இல்லாத முத்தங்கள் ஆசை
யுத்தத்தில் ஜெயிக்கின்ற வித்தைகள் ஆசை
அப்துல் கலாமாக விஞ்ஞான ஆசை - மறுபடியும்
அம்மாவின் கருவறைக்குள்ளிருக்க விபரீத ஆசை ..!!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications