நீயில்லாத நிமிடங்கள்
நீயில்லாத நிமிடங்கள்
ஒவ்வொன்றும்..
நெருப்பில் நனைந்து
நெஞ்சம் எரியும்..!
கனவில் கலந்து
கண்கள் விரியும்..!!
பகலும் நகராமல்
இரவும் முடியாமல்
திரிசங்கு சொடழுக்கமாய் - மனது
திரிந்து அலையும்..!!
நீ வந்து போன
திசை நோக்கி..
இளமை நொந்து போகும்..
உன் அன்ன நடை காணாமல்
என் எண்ணம்
எடை குறையும்..!!
தனிமையில் தேயும்
ஒற்றை நிலவாய்..
உன் இனிமை வானத்தில்
நான் எப்போதும்
இருந்து கொண்டிருப்பேன்
என்னை
இழந்து கொண்டிருப்பேன்..!!
இவரது முந்தைய படைப்புகள்:
1. என் தேவ தேவி
2. என் சைக்கிள் தேவதையே..
3. கைக்குட்டை கனவு
4. வளைகுடாவில் தொலைந்தவனே..
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.