For Daily Alerts
Just In
உன் வருகை- அருண்பிரசாத்
உன் வருகை
ஒவ்வொரு முறையும்
இவ்வாறே அமைதியிழக்கச் செய்கிறது
ஆலங்கட்டி மழையினூடே
இந்த மேற்கூரையெழுப்பும்
அதீத படபடப்பைப் போல.
பின் ஒவ்வொரு முறையும்
இவ்வாறே ஆசுவாசப்படுத்துகிறது
இந்த அறையினுள் படியும்
மழை முடிந்த மாலையின்
மெல்லிய வெயிலைப் போல.
- அருண்பிரசாத்
([email protected])
இவரது முந்தைய படைப்பு: காத்திருப்பு
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]