இணையம் என்றொரு வேடந்தாங்கல்
இணையம் என்றொரு
வேடந்தாங்கலில்
எத்தனை எத்தனை
அஞ்சல் பறவைகள்
ஒவ்வோர் அஞ்சலும்
உணர்வை ஏந்துது
உயிரில் கரைந்தே
உறவைத் தேடுது
இணைய நட்பெனும்
புனிதம் பூக்குது
இதய மொத்தமும்
இனிப்பில் மூழ்குது
விழிகள் கொத்தாத
உருவக் கனிகளை
விருப்பம் போலவே
மனங்கள் செதுக்குது
கண்கள் காணாத
நட்பில் வாழ்வதும்
கருத்தைக் குறிவைத்த
கலப்பில் மலர்வதும்
உலகச் செய்திகள்
அலசிப் பார்ப்பதும்
உள்ளூர்க் கதைகள்
கிள்ளிச் சுவைப்பதும்
கவிதை கட்டுரை
கொட்டிக் கொடுப்பதும்
கலைகள் பேசியே
கரைந்து போவதும்
சின்னச் சின்னதாய்
துணுக்கு மெல்வதும்
சிரிப்புச் சில்லறை
அள்ளி இறைப்பதும்
தனிமைக் கொடுமையில்
இனிமை நிறைப்பதும்
கருணை அன்புடன்
கதைகள் கேட்பதும்
அழுகைத் துயரினில்
அள்ளி அணைப்பதும்
எண்ண விரல்களால்
கன்னம் துடைப்பதும்
முன்னம் முன்னூறு
வருசம் தாண்டியே
முதிர்ந்து வந்ததாய்
பந்தம் கொள்வதும்
நேற்று சிங்கையில்
இன்று தஞ்சையில்
எங்கு நிற்பினும்
இணைய மடிகளிள்
உள்ளம் பாடுது
விரல்கள் ஆடுது
உயிரும் மாறியே
அஞ்சல் ஆகுது
இணைய நதிகளில்
தமிழும் வளருது
தமிழர் பண்புகள்
தரணி நிறையுது
இதனை விஞ்சியொர்
வரமும் உள்ளதோ
இணைக்கும் இணையமே
என்றும் வாழ்கவே
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications