ரமதான் வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
அமுதானது மொழியானது!
அகமானது ஒளியானது
அருளானது பரிவானது
அமைவானது தெளிவானது!!..
சுமைதான்-- அது தொலைவானது!
சுகமானது நிலையானது!!..
சுடரானது துணையானது!
சுவையானது பதிவானது!
தமதானது தளர்வானது!
தடமானது தரமானது!
தவமானது தகும்- -ஆனது!!..
தமிழானது நெறிதான் அது!
நமதானது! நமதானது!
ரமதான்- -அது நமதானது!
நபிநாயகர் தலமானது
நலமானது புலனானது!!..
(ரமதான் விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நாடானசவுதி அரேபியாவிலிருந்து இக்கவிதை எழுதப்பட்டது)
- தொ. சூசைமிக்கேல்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications