For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஒரு மழைக்காலம்- பத்மப்ரியா

By Super
Google Oneindia Tamil News

12 வித ராட்டினங்கள் ஏறி
சுற்றிக்கொள்ளலாம் தீம் பார்க்கில்
சிறுவர்கட்கு ரூ.200
பெரியோருக்கு ரூ.300

இறுக்க கண் மூடி
கம்பியை பற்றி - திகிலுடன் ஒன்று

ஓ என்று அலறி - பக்கத்து
தோளில் முகம் புதைத்து ஒன்று

விழிகள் விரித்து கைகளால்
நெஞ்சை அழுத்தி - இன்னும் பல

இவற்றுடன்
வேண்டுமானால்
இறங்கிய பின் வாந்தியும் எடுக்கலாம்

ஆனால்..
மேற்சொன்ன அனைத்தையும்
இலவசமாகத் தந்த எனக்கு

வழியில்
எங்கே விழுந்துவிடும் முன்பே
ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம்
நன்றி என்று

மழைக்கால சென்னையில்
லிப்ட் கேட்டு
என்னுடன்
டூ வீலரில் வந்தவர்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X