மழைக்குப் பிறகு ஒரு மாலையில்...
![]() மேகச் சகதியினால் மலினமுற்ற வான மகள் தேகம் கழுவி விட்ட தண்ணீர் மழையாகி முகில்கள் கரைந்து இந்த மண்ணில் விழுந்து விட மெழுகிய பின் கோலமிடா மூளித் தரை போல விண்வெளியே நிர்மலமாய் வெளிர் நீலத் தனித்துவமாய், எல்லையற்ற ஏகமதாய் எழில் உருவப் பாழ் வெளியாய், புத்தொளியில் பூத்திருக்க, பெய்த மழை கீழிறங்கி பூதலத்தின் தூசகற்றி, பூத்த செடி காய்த்த மரம் மலை மடுக்கள் நிலம் தருக்கள் மாசகற்றித் தேசளித்து, சலசலத்துத் தெருவோரம் தண்ணீராய்த் தேங்கி நிற்கும், தண்ணென்ற காற்றோடு மண் எழுப்பும் மென்வாசம், கண்ணும் கருத்தும் இன்பக் காட்சியிலே வட்டமிடும், புற்றிலிருந்து ஈசல் பெருங்கூட்டமாய் பறக்கும், சிற்றாரின் கும்பல் சிரிப்பொலியை அங்கெழுப்பும், தெருவே கலகலக்கத் தொடங்கும் விளையாட்டு, அறியாச் சிறுவர்களின் ஆசைப் பெருங்கூத்து, காகிதத்தில் கப்பல் விடல், கரம் கீற்றிக் கால் நொண்டி பாண்டி விளையாடல், பம்பரத்தைச் சுற்றி விடல், மண் குவித்து மலை சமைத்து, மலை மீது சாமி வைத்து சின்னப் படிகள் பல செங்குத்தாய் அங்கமைத்து பசும்புல் தழை சொருகிப், பக்கத்தில் நந்தவனம் இசைவாய்த் திருக்குளம், ஈர மண்ணால் தானமைத்து, உச்சியிலே சாமிக்கு ஊதலிலே நாதஸ்வரம், உற்சாகப் பாலகரின் உற்சவங்கள், ஊர்வலங்கள், சேய்க் குலத்தின் முதன் லயிப்பில் தெய்வீக மெய் காட்சி மெய் மறந்த ஓர் இருப்பு மாசற்ற நல் அழகு பெய்த மழைக்குப் பின் பூலோகம் சுவர்க்கமெனின், செய்த தவம் உருகித் தரை நோக்கி வீழ்ந்ததுவோ? (இந்தக் கவிதையை எழுதிய சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த பூரணி அம்மாளுக்கு இப்போது வயது 92. 1926ல் எழுதத்தொடங்கி இன்னும் சிறுகதைகள், கவிதைகள் எழுதுகிறார். கை நடுங்காமல், வார்த்தை குழறாமல் மிகத் தெளிவாக எழுதும்பூரணி, பெண் கல்விக்காக 1938ம் ஆண்டு முதல் போராடி வந்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் கிராமப் புற பெண்களிடம் விடுதலை குறித்த விழிப்புணர்ச்சியை, திருமணப் பாடல்கள்,நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக ஊட்டியுள்ளார். தமிழ் தவிர இந்தியிலும் புலமை பெற்ற பூரணி, இந்தியில் வெளியான பலபடைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications