இன்னும் சுற்ற வேண்டும்எதேனும் தெரிந்து கொள்ள...- ரிஷி சேது
எல்லாம் தெரிந்தவர்கள் ஊரில் வாழ ஆசைப்பட்டேன்
ஊர் ஊர் ஊராய் சுற்றி வந்தடைந்தேன் இவ்வூருக்கு
முதலாவதாய் சந்தித்த நபர் இப்போது தான்
நட்சத்திரங்களை எண்ணி வந்ததாய் சொன்னார்
ஆகா எத்தனை என்றேன்?
உனக்கு எவ்வளவு எண்ணிக்கை தெரியுமெனக் கேட்டார்
நான் தலை சொரிந்து நிற்க
போதாது உன்னறிவு போ என்றார்
அடுத்ததாய் சந்தித்த நபர் சொன்னார்
இப்போது தான் கடல் நீரில்
கரைந்திருக்கும் உப்பை கணக்கெடுத்து
களைத்துப் போய் வந்தேன் என்ன வேண்டும் கேள் என்றார்
கேள்வியை மாற்றினேன்
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசமென?
காற்றில்லாமல் வாழம் வழி கண்தடறிய என்றார்
மரணத்திற்கப்பாலா என்றேன்?
முட்டாளே நினைத்துப்பார்
காற்றில்லாமல் வாழ முடியுமானால்
நிலவில், செவ்வாயில் தரையிரங்கி
நிலம் பிடிக்கலாமென்றார்..
ஐயா நீருக்கென்ன செய்வீரென்று
நிற்காமல் கிளம்பினேன் அங்கிருந்து
மூன்றாவதாய் சந்திதவர்
பறக்கும் வழி கண்டேனெற்றார்
ஆச்சர்யமெனக்கு ஐயா எப்படியென்றேன் எப்போதும் போல்,
பறவைச் சூத்திரம் தெரியுமாவென்றார்
தெரியாதென்றேன்
சொன்னாரெனக்கு
பசிக்கு உணவு
செரிக்க நீர்
அளவாய் நித்திரை
சுவாசம் நிறுத்தி சுவாசம் செய்தால்
அதானாலே அவைகள் வேகமென்றார்
ஐயா ஆகட்டும் நீங்கள் பறந்தீரா?
அதிகப்பிரசங்கி கேள்
நான் வழிதான் கண்டேன்
நீயும் முயற்சி செய் என்றார்..
எதுவும் புரியாமல்
அடுத்தவூர் பயணமானேன்
சிந்தனையில்
நட்சத்திரங்களை எண்ணினேன்
காற்றில்லாமல் வாழ்ந்தேன்
பறந்தேன்
இன்னும் சுற்ற வேண்டும்
எதேனும் தெரிந்து கொள்ள...
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications