விலகியே இரு- ஷைலஜா
Subscribe to Oneindia Tamil
தகாதன தள்ளி
வேண்டுவன விரும்பி
தண்டவாளப்பாதையில்
இணைந்து நடந்தோம்
நட்பு வலுத்தது
இன்பத்தில் இனித்து
துன்பத்தைப் பகிர்ந்து
நட்பில் கரைந்தோம்
வாழ்க்கையின் அர்த்தம்
புரியத் தொடங்கியது
பாரவண்டியைச் சுமந்து
பாதை மட்டுமே இலக்காய்
பயணத்தை மேற்கொண்டோம்
நட்பு என்று காதலாகிப்போனது?
ஒளியான நட்புப் பாதை
ஒலியான காதல் பாதையானதும்
மெளனத்துவம் கலைந்தது
வெளிச்சமும் நிழலும்
விடை பெற்றுக்கொண்டன
ஓசையின் ராஜ்ஜியத்தில்
வார்த்தைகள் வலுத்தன
வாழ்க்கை ரயில் தடம்புரளும்
வாய்ப்பு வருமுன் விழிப்போம்
வேண்டாம் நண்பனே
காயங்களை மறக்க
காலம் மருந்திடட்டும்
நட்பாகவே பழகு
விலகியே இரு
பயணம்
இனிதாகும்












Click it and Unblock the Notifications