For Daily Alerts
Just In
விளையாட ஒரு பொம்மை
அழகா சுத்துது காத்தாடி
அடுக்கடுக்கா மணல் மேலே
ஆராச்சும் வருவாங்க
பாப்பாக்கு காட்டி விளையாட....
விலை கேட்டா வித்திரலாம்
எப்படியும் ரெண்டாச்சும்!
அக்கா, அண்ணா போறாங்க
ஆனா யாரும் வாங்கலயே!
எம்புட்டு நேரம் தவமிருக்க?
ஆச்சு ஆறு கடந்தாச்சு
அழுவுற தம்பிக்கு பால் வேணும்
அரிசி வெக்க உலை வேணும்
அழுக்குப் போக தலை வாரி
பொட்டு வெச்சு முத்தம் வெக்க
எங்களுக்கு அம்மா வேணும்
இந்த எல்லா பொம்மையும் நாந்தாரேன்
எங்க அம்மாவை நீ தரியா?
-வேதா மஹாலஷ்மி([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]