காற்றில்லா உலகில் சுவாசித்த கவி-'பாரதி'
- அனுக்ரஹா
புதுமையென
இலக்கணங்களைத்
தகர்க்கவில்லை - புது
இலக்குகள் உருவாக்கினார்:
பழமையின் சவத்தின் மேல்
ஜீவிக்கவில்லை:
அவர் புதுமை,
உணர்வுகளின் வேட்கையிலே
உயிர்த்தது.
வரலாற்று பெருமிதத்தால்
வற்றிடவில்லை - அவர்
கவிதைக்கு மெய்யேனும்
புது அழகு சேர்த்தார்
சிந்தனைக் குதிரைகளுக்கு
மரபுக் கடிவாளங்கள் வேண்டாம்
நெஞ்சிலுரமும் நேர்மைத்திறமும்
போதுமென்றார்.
அடிமைச் சங்கிலியை
உடைத்தெறிக்க
அரசனாக வாளெடுத்தார் -
சமூகம் அளித்த
வறுமை அரியணையினின்று:
நாம் கனவுகள் காண்போம்
விடியலுக்குள் மறைந்துவிடும்
அவர் கனவுகள் கண்டார்
இருண்ட இரவு விடியல் கண்டது
சொற்களில் விதைத்தார்
தன் அக்னி குஞ்சை
உணர்ச்சித் தழல்களால்
வெந்து தணிந்தது பழமை
சிறகு விரித்துப் பறந்தார்
சுதந்திர வானில்
சிறகு உணராத பறவைகள்
புருவம் சுளித்த போது
ஞான ரதங்கள் படைத்தார்
மனக் குதிரையினால்
புது உலகங்கள் சென்றார்
தன் காலத்தையும் தாண்டி:
காற்றோடு உறவாடும்
கானகத்துள் பல
பறவைகளின் இசையினை
மொழிபெயர்த்தார்
பிறமொழிக் காப்பியங்கள்
தமிழில் பேச
கூடுவிட்டுக் கூடு பாயும்
வித்தையறிந்திருந்தார்
மதியை மயக்கும்
சுழலும் உலகையே
தன் கவி அம்புகளால்
மயங்கச் செய்தார்.
புதுமையிலும் புதுமை
காற்றில்லா உலகில்
சுவாசித்த கவி.
- அனுக்ரஹா ([email protected])
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications