கவிதைக்கு ஓரு காதல்
Subscribe to Oneindia Tamil
காதலுக்கு கவிதை எழுதுவோர் மத்தியில்
கவிதைக்காக என் காதலை நான் எழுதுகிறேன்
நீ எந்த நாடு, நீ எந்த மதம், நீ என்ன மொழி,
உன் பாலினம் என்ன ஏன் நீ உயிருள்ள ஜீவனா
அல்லது, உயிரற்ற ஜடமா
என்று கூட தெரியவில்லை எனக்கு
ஏன் உன்னை காதலித்தேன் புரியவில்லை
எதற்கு உன்னை காதலிக்கிறேன் தெரியவில்லை
ஆயிரம் கவிஞர்கள் உன்னை தன்
பேனாவால் பிறக்க வைக்கிறார்கள்
பிறக்க வைத்தவர்களை மறக்க
வைக்கிறாய் நீ!
மனிதர்களை மறந்த என் மனம்
உன் மடியில் வீழ்ந்திருக்க ஆசைப்படுகிறது
உறங்கும் வரை என்னை தாலாட்டிவிட்டு
உறங்கிய பின் தரையில் இறக்கி விடாதே!
நீ என்னை இறக்கி விட்டால் அன்று தான்
என் இதயம் இறக்கும் நாள்
ஆயிரம் பேரை காதலிக்கும் நீ!
உன்னை மட்டும் காதலிக்கும் நான்!
உன்னால் இயக்கப்படும் இதயம் நான்!
உன்னால் இறக்கப்படும் இதயமும் நான்!
- லக்ஷ்மி (mailto:[email protected])
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications