சுண்டி எறிந்த நிலவு ...
Subscribe to Oneindia Tamil
-அறிவு
கண் விழித்துப் பார்த்தேன்
விடிந்து வெகு நேரம் ஆயிருந்தது.
கண்ணில் 'கட்டிங்' கலங்கல்;
போர்வையை நீக்கி விட்டு
தரையில் கால் பதித்து
ஜன்னல் வழியே
அறைக்குள் அத்துமீறி வந்த
சூரியனைப் பார்த்தேன்.
சூடான சூரியன்!
வெளிச்சப் பூவை மொய்த்தது நினைவு வண்டு;
இதே சூரியனைத்தான்,
எனது கண்கள் என்றாள் அவள்!
அப்படியே பகலவனின் தேஜஸ் என்றாள்;
புளகாங்கிதமடைந்தேன்!
வானத்தைப் போல விசால மனசு என்றாள்;
மயங்கிக் கிடந்தேன்!
என்னவெல்லாமோ சொன்னாள்,
எல்லாமே மனதிலேயே இருக்கிறது!
அவள்தான் என்னிடம் இல்லை.
எல்லாவற்றையும் சொல்லி விட்டு
எங்கேயோ போய் விட்டாள்.
என்னை சுண்டி எறிந்து விட்ட
அந்த நிலவை விட,
சுட்டெரித்த இந்த சூரியன்
குளிர்ச்சியாக தெரிந்தது!
எழுந்து நின்று
நெருப்புக் கடவுளை ரசித்தேன் - சந்தோஷமாக!
-அறிவு ([email protected])
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications