Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாராலாய்த் தொடங்கும் போதே...

Subscribe to Oneindia Tamil

-ரிஷி சேது


Rainஎப்போதும் சொல்வதற்கென
ஏதொவொன்றை
விட்டுப் போகிறது
மழை நாள்- அவரவற்கு
சாராலாய்த் தொடங்கும் போதே
ஆரம்பித்துவிடும்- அதன் குரல்கள்

பள்ளிக்குப் போன மகள்
குடையெடுத்துப் போகாத ஆதங்கம்
அம்மாக்களுக்கு
மகள் நனைந்து திரும்புகிறாள்- தன்
மழையனுபவம் சொல்ல

சிட்டுக் குருவிகள்
அங்கேயிங்கே பறந்து
சொல்லத் துடிக்கிறது
தன்னனுபவம் பற்றி

திண்ணை விட்டகலா
அப்பா சொல்வதெல்லாம்
நிஜமென்றால்-
மழை, தேவர்களின்
பெரு மூத்திரம்

நான் நினைக்கும் முன்பே
தெருவிறங்கி நனையும்
என் மனது
ஒண்ட இடமில்லாமல்
தவிக்கும் தெரு நாயாய்...

- ரிஷி சேது ([email protected])

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+