For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழைக் கால ஈரம்!

By -சண்முகா
Google Oneindia Tamil News

Rainபோர் கொள்ளும் மேகம்
தார் போலக் கருக்க

ஒளி மினுக்கல் மின்னி
துளித் துளியாய்த் தூவ

சிதறும் வெள்ளிக் கம்பி
உதறி மண்ணில் இறங்க

வட்ட வட்டமாய்ச் சொட்டி
வறண்ட பூமி நனைய

தென்றல் கூடிய காற்றில்
மண்ணின் வாசனை கசிய

மிதமாய் நடுக்கும் குளிரில்
இதமாய் தேகம் சிலிர்க்க

மரக்கிளை இலைகளின் இடுக்கில்
தூறல் துளிகள் தங்க

நடை பாதையில் ஈரம்
கேட்டுக் கதவில் ஈரம்

வீட்டுக் கூரையில் ஈரம்
ஆட்டு மந்தையில் ஈரம்

எங்கும் எதிலும் ஈரம்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X