விலாசமிருந்தால் அனுப்பிவை..-ரிஷி சேது
துளி - 1
நீ
இல்லையெனச் சொல்லும்
ஒவ்வொருமுறையும்
ஒரு தீவிரவாதியைப்போல்
உன் மீதான என் காதல்
அதிகமாகிறது.
துளி - 2
நீ
நான்
மற்றும் நம் காதல்
ஒரு புதிய பிரபஞ்சம்...
துளி - 3
நீ
சொல்லாவிட்டாலென்ன
உன் கண்கள் பேசுகிறது
காதல் மொழி
துளி - 4
நீ
வைத்துப்போன செடிகள்
பூத்துக்குலுங்குகின்றன
விலாசமிருந்தால்
அனுப்பிவை
வாசனைகளை
அனுப்பிவைக்கிறேன்...
துளி - 5
நீ
உன் காதலை
உண்மைக்கும் பொய்யிற்கும்
இடையில் ஒளிக்கிறாய்
அது
இல்லாத ரகசியம் போல்
வெளியேறுகிறது...
துளி - 6
நீ
என்னை எதுவாகவோ
எதுவாகவோ நினைத்தாய்
நான் அதுவாக மாறினேன்
எல்லோரும் என்னை
பித்தனென்கிறார்கள்
துளி - 7
நீ
என்
சொர்க்கமும்
நரகமும்....
துளி - 8
நீ
உன் பிரியத்தை
கோபமாக காட்டுகிறாய்
உலகம் வெறுப்பதாய்
சொல்கிறது..
துளி - 9
நீ
நந்தவனம்
நான் சில்வண்டு
நம் காதல் மொட்டுகள்
எப்போதும்
நம்மைச்சுற்றி.....
துளி - 10
நீ
புதுமணலின்
வேராய் படரவிட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை...
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications