"மூன்றாம் முறையாய்"-ரிஷி சேது
முதலில்
தகப்பனெனும் மிருகம்
தாயை அடிக்கவும் உதைக்கவும் செய்ய
நான் மிட்டாய் தின்று கொண்டிருந்த
அந்தாளில்
இரண்டாவது
காதலெனும் மாயை செய்து
காமம் துப்பிய நாளில்
நான் நம்பிக்கையை
உடலாக்கியதில்
மூன்றாவது
நீயும் உன் தோற்றமும் பார்த்து
கண்மறைத்த தோற்றப்பிழையில்
உனை பிடிப்பதாய் சொல்லி வாழ ஆரம்பித்ததில்
என்ன ஆச்சர்யம்
உனக்கு சொல்வேன்
எல்லா ஆண்களும் நீயாயில்லை
எல்லா பெண்களும் நானாயில்லை
சந்தோஷம் தான் -இதில்
எனக்கு
ஆணோடு பழக கொடுக்கப்பட்ட
எல்லா சந்தர்ப்பத்திலும்
நான் சந்தித்தவர்கள்
பெரும்பாலும் நீயாகவும்
அவர்களின் தோழிகள்
பெரும்பாலும் என்போலவும் தானிருந்தனர்
என் மீதான உன்
அவமதிப்பின் வலி
தீராமலிருக்கும் போதே
முடிவெடுப்போம்...
சின்ன பாம்புக்குட்டிக்கும்
தூக்கியெறியப் படும்போது
எத்தனை கோபம்..
உன் கேலியும் கிண்டலும்
எனை ஒன்றும் செய்யாது
நினைத்துப்பார் ஒரு நிமிடம்
உனை தனியனாய்
நான்
தற்காத்து தற்கொண்டான் பேணி
என்று தான் வாழவந்தேன்
ஆனால்
எத்தனை இரவுகள்
உன் மிருகத்தனத்தின்
ஆணிவேரை, அலட்சியத்தின்
தீவிரத்தை மெய்பித்ததிருக்கும்
போராடுதல் எனக்கு புதிதில்லை தான்
உன் புரிதலின் சுவாரசியம்
உணவுகளின் சுவையறிவு
உறவுகளின் வகையறிதல்
எனக்கு ஆச்சர்ய்மாகதான் இருக்கிறது
என்ன செய்ய
நான் பிறப்பிற்கு பிறகு
மூன்றாம் முறையாய் முட்டாளக்கப்பட்டேன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications