பிரிதல்-1-ரிஷி சேது
ஞாபகத்தின் கடைசி செல்லிலிருந்து
விலகி விடவில்லை அந்த
பிரிவின் கடைசி சில நொடிகள்
நீயும் நானும் மற்றும்
காலி செய்யப்பட்ட கோப்பைகளும் ...
நீ அவஸ்தையாய்
கை பிசைந்து நின்றிருந்தாய்
நான் நகம் கடித்துக் கொண்டிருந்தேன்
மென் காற்றும் சிறு குளிரும்
இன்னும் சிலவும் நம்மையும்
நம் மெளனத்தையும்
மேலும் இறுக்கிற்று.
நீ கேட்க நினைத்ததை நானும்
நான் கேட்க நினைத்ததை நீயும்
சற்றேரக்குறைய தவிர்த்திருந்தோம்
அது நிகழாமலும் போயிற்று
சும்மா இருத்தல் என்பது எத்தனை
பேரவஸ்தை
அந்த நாளின் இறுதிக் கணம் வரை
வந்தாயிற்று எப்படியும்
நாம் சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும்.
உன் கண்கள் கலங்கியிருந்தன
என்னைப் பார்ப்பதை தவிர்த்தாய்
ஏதேதோ சர்தாரி கடி ஜோக் எல்லாம்
சொல்லிக் கொண்டிருந்தாய் நீ ஏதோ
உளருவதாய்ப் பட்டது எனக்கு.
ஆயிற்று நான் ஒரு முடிவுக்கு வந்தேன்
எப்படியும் சொல்லி விட வேண்டும்
போய் வா குட்பை என்றேன்
நீ நகர்ந்து போனாய், நான் -
நீ புள்ளியாய் காட்சி எல்லைக்குட்பட்டவரை
பார்த்து விட்டு
சிரித்துக் கொண்டேன்
இதுவும் மாறும் ...
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications