கொஞ்சம் நடக்கலாம்...

பாதை எதுவெனத்தெரியாதாயினும்
தொடருமென் பயணம்
முடிவிலி நோக்கி...
மனம் மட்டும்
போனக்காலத்தின் பின்னாலும்
வருங்காலத்தின் முன்னாலும்
போய்திரும்பும் நிமிடத்தில்
களைப்பின்றி...
ஓர் வெயில் கால
நடை பயணத்தில்
நிழலாய் தொடரும் கிழ நாயொன்று
சற்றே தொடர்ந்துவிட்டு
திரும்பிப்போனது
மனம் அதன் பின்னாலும் போய்வந்தது
பிசாசுகள் அலைவதாய் சொல்லப்பட்ட
ஓர் நடுநிசியில் வாய்த்த பயணத்தில்
நான் மின்மினிகளோடு அலைந்தேன்...
அது நான் எப்போதோ செய்த கடல் பயணத்தில்
அலைகளாய் ஆடிய மனதை ஒத்திருந்தது
எல்லா இரயில் பயணங்களும்
அரசியலோ பொதுநலமோ
பேசியபடியே முடிகிறது
கொஞ்சம் பயமாகவும்
பஞ்சுப்பொதிக்குள்
தலைசொருகி அதன்
ஈரமுணர முயற்சிப்பதாகவே
அமைகிறது இறங்கும் வரை
விமானப் பயணங்கள்....
பாதைகளோடு நடப்பதில்
பயணம் இனிப்பதில்லை
தெரியா இடம்
இல்லா பாதை
போய் வந்தால்
சொல்வதெற்கென அனுபவங்கள்
திரும்பவே முடியா பயணமொன்று
அமையலாம் பாதைகளும்
போகுமிடமும் தெரியாததாயிருக்கக்கூடுமது...
தனியாகவே போயாக வேண்டும்
அவ்வனுபவம் சொல்ல
வரவும் கூடும் நான்...
அதுவரை
கொஞ்சம் நடக்கலாம் வாங்க
-ரிஷிசேது ([email protected])
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications